For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக்கோரி திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருப்பூர்: அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றா விட்டால் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கப் போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, அவிநாசியில் 14 சமூக ஆர்வலர்கள் பிப்ரவரி 8ம்ஆம் தேதி முதல் நடத்திவரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

Implement Avinashi-Athikadavu water project: people protest

போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட சுமார் 1000 பேர் இன்று காலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தில ஈடுபட்டவர்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தியுள்ளனர். மேலும், அவர்கள் தங்களது குடும்ப அட்டையை அரசிடம் திருப்பி அளிக்கும் வகையில் அவைகளை கைகளில் ஏந்தி முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் காவல் துறை மாநாகர துணை ஆணையர் திசா மிஷல், மாவட்டக் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

நீடிக்கும் உண்ணாவிரதம்

இதனிடையே அவிநாசி-அத்திக்கடவு திட் டத்தை நிறைவேற்றக்கோரி, அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே 14 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சேவூர், கருவலூர் உள்ளிட்ட பகுதிகளில் இப்போராட்டத்துக்கு ஆதரவாகவும் திட்டத்தை நிறை வேற்றக் கோரியும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட் டுள்ள 14 பேரும் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் போராத்திற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினரிடையே ஆதரவு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Thousands of people protested in Tirurpur collectorate to urge the govt to Implement Avinashi-Athikadavu water project immediately.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X