For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சர்ச்சைக்குரிய தெர்மோகோல் திட்டத்திற்கு நான் மட்டும் காரணம் இல்லை- செல்லூர் ராஜு 'அடடே' விளக்கம்

By Devarajan
Google Oneindia Tamil News

சென்னை: வைகை அணையில் தெர்மோகோல் மிதக்கவிட்டது ஏன் என்று அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு விளக்கம் அளித்திருக்கிறார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வைகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மோகோல் மிதக்கவிட்டு சர்ச்சையில் சிக்கினார் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு. சமூக வலைத்தளங்களில் கடுமையான கிண்டலுக்கும் கேலிக்கும் ஆனது அவரின் தெர்மோகோல் மிதக்கவிடும் திட்டம்.

Implement of thermocol plan in Vaigai Dam, explains Sellur raju

இந்த நிலையில் தெர்மோகோல் திட்டம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செல்லூர் ராஜூ கூறுகையில்,

தெர்மோகோல் திட்டத்துக்காக சமூக வலைத் தளங்களில் எனக்கு பாராட்டும் கிடைத்துள்ளது. விமர்சனமும் கிடைத்துள்ளது. அது நானாக சுயமாக எடுத்த நவடிக்கை இல்லை.

அதிகாரிகளின் உரிய ஆலோசனைகள் பெற்றபிறகே எடுக்கப்பட்ட நவடிக்கை அது. தெர்மோகோல் திட்டம், நீர் ஆவியாவதைத் தடுக்க ஏற்கெனவே உலக நாடுகளில் உள்ள நடைமுறைத்திட்டம் தான்.

வெளி நாடுகளில் உள்ளதைப்போல, நீர் நிலைகளில் கறுப்புப் பந்துகள் மிதக்க விட்டு நீர் ஆவியாவதைத் தடுக்க அதிக செலவாகும் என்றார்.

English summary
TN Govts, Thermocol sheets to prevent evaporation loss in Vaigai flopped.'why we implement thermocol plan in vaigai dam',explained by minister sellur raju.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X