For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை முதல் சென்னையில் 'குளுகுளு' மெட்ரோ ரயில்...! - வீடியோ

சென்னையில் நாளைமுதல் திருமங்கலத்தில் இருந்து நேரு பூங்காவரை பூமிக்கடியில் இயங்கும் மெட் ரோ ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நாளை முதல் முதன்முதலாக சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. பூமிக்கடியில் இயக்கப்படும் இந்த மெட்ரோ ரயில் பயணிகளுக்கு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்

சென்னையில் மெட்ரோ ரயில்பாலங்கள் அமைக்கும் பணி ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. அதேபோல் பூமிக்கடியில் சுரங்கபாதை அமைத்து மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணியும் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.

In Chennai From tomorrow onward metro train service will be started

இதனால் சென்னை அண்ணாசாலையில் பாதைகள் மாற்றப்பட்டு சில அடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை பல நூறு மீட்டர்கள் கடந்து கடக்கும் நிலை உருவானது.

அண்ணாசாலையில் சுரங்க ரயில்பாதை அமைக்கும் பணி நடந்த போது, சில சமயங்களில் சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு மக்கள் சிக்கலுக்குள்ளாகினர். இந்நிலையில் சுரங்கப்பாதை ரயில் பாதைகள் அமைக்கும் பணி முடிவடைந்து நாளை முதல் திருமங்கலம்- நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளது. இதில் குளுகுளு ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில் பாதை, பூமிக்கு கீழே 125 ஆடி ஆழத்தில் போடப்பட்டுள்ளது. இந்த பாதையின் நீளம் 7.65 கிலோ மீட்டர். இந்த ரயில் சேவையால் சாலைப்போக்குவரத்து நெரிசல்குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மெட்ரோ சேவை, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சென்னைக்கும் இந்தப் போக்குவரத்து பயனுள்ளதாக இருக்கும்.

English summary
In Chennai From tomorrow onward metro rail will be ready from Thirumangalam to Nehru park
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X