For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. தமிழக ஆளுநர் நம்பிக்கை

நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக ஆளுநர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக ஆளுநர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் தமிழில் வாதாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தீர்ப்புகளின் நகலும் தமிழில் கிடைக்க வேண்டும் என்று கோரப்பட்டு வருகிறது.

In future court verdict details may come in Tamil too - Banwarilal

தற்போது இதுகுறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசி இருக்கிறார். சென்னையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஆளுநர் பல்வேறு மொழிகள் குறித்து பேசினார்.

அதில் ''நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தாய்மொழி தான் எப்போதும் ஒருவருக்கு முக்கியம்'' என்று கூறினார்.

மேலும் ''சமஸ்கிருதம் பல மதங்களின் தாயாக இருக்கிறது. பிற மொழிகளை கற்றுக்கொண்டால் அறிவுத்திறன் வளரும். மக்கள் எப்போது பிறமொழிகளை கற்க வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
Tamilnadu governor Banwarilal Purohit that in future court verdict details may come in Tamil too. He also added that people should give more importance to their mother tongue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X