For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பல ஆயிரம் போலீஸ் ஸ்டேஷன்களில் தொலைபேசி வசதி இல்லை... அதிர்ச்சி ரிப்போர்ட்!

நாடு முழுவதும் 1,211 காவல்நிலையங்களில் அடிப்படை வசதியான தொலைபேசி வசதி கூட இல்லை என காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

By Suganthi
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் 13,984 காவல் நிலையங்களில் 1,211-ல் தொலைபேசி வசதி கூட இல்லை என காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் காவல் நிலையங்களில் உள்ள விஷயங்கள், வசதிகள், குறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையை முன்வைத்து உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும்.

தொலைபேசி வசதி கூட இல்லை

தொலைபேசி வசதி கூட இல்லை

இந்த ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையில், ஜனவரி 1, 2017ஆம் ஆண்டு நிலவரப்படி, 1,211 காவல் நிலையங்களில் தொலைபேசிகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரத்துக்கு ஒரு வண்டி கூட இல்லை!

அவசரத்துக்கு ஒரு வண்டி கூட இல்லை!

மேலும், 260 காவல்நிலையங்களில் ஒரு வாகனம் கூட இல்லையாம். 103 காவல் நிலையங்களில் வயர்லெஸ் கருவியும் தொலைபேசி வசதியும் இல்லை என அந்த அறிக்கை கூறுகிறது.

ஆண்டுதோறும் அதிகரிக்கும் எண்ணிக்கை

ஆண்டுதோறும் அதிகரிக்கும் எண்ணிக்கை

இதில் கொடுமை என்னவெனில் ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதுதான். 2012ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட அறிக்கையில், 296 காவல்நிலையங்களில் முற்றிலுமாக தொலைபேசி வசதி இல்லாமல் இருந்தது. தற்போது அது 1,211 காவல்நிலையங்கள் என உயர்ந்துள்ளன.

அடிப்படை வசதிகள் இல்லாத மாநிலங்கள்

அடிப்படை வசதிகள் இல்லாத மாநிலங்கள்

வாகனங்கள், தொலைபேசி மற்றும் வயர்லெஸ் கருவிகள் இல்லாமல் இயங்கும் காவல்நிலையங்கள் மத்திய பிரதேசம், மணிப்பூர் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் அதிகம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In India 1,211 police station do not have telephone facilities said Bureau of Police Research and Development
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X