For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரியகுளத்தில் ஓபிஎஸ் வீட்டை சூழ்ந்து கொண்ட பழங்குடியின மக்கள்! - வீடியோ

பெரியகுளத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் வீட்டை, பட்டா கேட்டு பழங்குடியின மக்கள் சூழ்ந்துகொண்டனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

தேனி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை, பழங்குடியினர் சூழ்ந்துகொண்டதால் பரபரப்பு உண்டானது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கான ஆலோசனை கூட்டத்துக்காக சொந்த மாவட்டத்துக்கு சென்றுள்ளார்.

In Periyakulam Tribal people went to Deputy CM OPS house crowd

இந்நிலையில் பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டை தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் சூழ்ந்துகொண்டனர்.

பல காலமாக தாங்கள் வாழும் இடத்துக்கு பட்டா இல்லாத காரணத்தால் அரசின் உதவிகளைப் பெறுவதில் சிக்கல் உள்ளது என்றும் அதற்காக பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் துணை முதல்வர் வீட்டை சூழ்ந்துள்ளனர்.

ஆனால், பழங்குடி மக்கள் சென்ற நேரத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ், கோவிலுக்கு சென்றிருந்தார். அதனால் மக்கள் பல மணி நேரம் காத்திருந்து அவரை சந்தித்தனர்.

பழங்குடி மக்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட ஓபிஎஸ், தேனியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் அன்று பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று பதில் கூறி அனுப்பியுள்ளார்.

English summary
In Periyakulam Tribal people went to Deputy CM OPS house crowd and demanded Patta for their residence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X