For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேலத்தில் ரயில் மீது ஏறி போராடிய மாணவன் மீது மின்சாரம் பாய்ந்ததால் பதற்றம்

சேலத்தில் ரயிலை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது ரயில் மீது ஏறிய மாணவன் மீது மின்சாரம் பாய்ந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

Google Oneindia Tamil News

சேலம் சேலத்தில் ரயிலின் மீது ஏறிய மாணவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. மதுரை, சேலம் உள்ளிட்ட இடங்களில் இளைஞர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சேலத்தில் ரயிலை மறித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது ரயிலின் மேற்கூரை மீது ஏறி மாணவர்கள் ஓடியதாக கூறப்படுகிறது.

In Salam a student injured by a electric power in train

இதில் ஒரு மாணவர் மீது உயர்அழுத்த மின்கம்பி உரசியது. அப்போது மின்சாரம் பாய்ந்து அந்த மாணவர் தூக்கி வீசப்பட்டார்.

உடல் முழுவதும் வெந்த நிலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அந்த மாணவரை சக மாணவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மாணவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. மின்சாரம் தாக்கி மாணவர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
In Salam a student injured by a electric power when he was climbing on top of the train. He injured severely and hospitalized.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X