For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மர்மநோய் தாக்கி மடியும் மாடுகள் ... பீதியில் விவசாயிகள் - வீடியோ

By Suganthi
Google Oneindia Tamil News

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பகுதிகளில் மாடுகளை மர்மநோய் தாக்கியுள்ளதால் மாடுகள் அடுத்தடுத்து மரணமடைந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

தமிழ்நாடு முழுக்க வறட்சி நிலவிய போது மனிதர்களைப் போல மாடுகளும் தண்ணீர் பஞ்சத்தில் கஷ்டப்பட்டன. தற்போது ஆங்காங்கு நல்ல மழை பெய்து வருவதால் தண்ணீர் பிரச்சனை தீர்ந்து வருகிறது.

In Sathyamangalam, cattle dying due to unknown disease

சத்தியமங்கலம் அடுத்துள்ள கொண்டையாம்பாளையத்தில் வறட்சிக்கு தப்பித்த மாடுகள் தற்போது பெயர் தெரியாத நோய் தாக்கி இறந்து வருகின்றன. கொண்டையாம்பட்டியில் பொன்னுச்சாமி என்பவர் மாடுகளை மேய்யசலுக்கு கூட்டிச் சென்று பிறகு வீட்டுக்குக் கொண்டு வந்து கட்டியுள்ளார். ஆனால், இரவில் அசாதாரண ஒலி எழுப்பிய மாடு சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளி இறந்துள்ளது.

இதேபோல், அந்த ஊரில் அடுத்தடுத்து ஐந்து மாடுகள் வரிசையாக இறந்துள்ளன. அதன்பிறகு கல்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் மாடுகள் இறந்த காரணத்தை ஆராய்ந்துகொண்டுள்ளனர். குடும்பத்துக்கு வருமானம் தரும் மாடுகள் அடுத்தடுத்து இறப்பதால் விவசாயிகள் பீதியில் உள்ளனர்.

English summary
In Sathyamangalam, cattle dying due to unknown disease and farmers are in fear.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X