For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனைவி சொன்ன 'அந்த' வார்த்தையால் ஆத்திரத்தில் கொன்றேன்... கோவில் அர்ச்சகர் பாலகணேஷ் வாக்குமூலம்!

மனைவி ஞானப்பிரியா குழந்தையின்மை குறைபாட்டிற்கு தான் காரணம் என்று அடிக்கடி இழிவுபடுத்தியதாலேயே கொன்றதாக வடபழனி குருக்கள் பாலகணேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை வடபழனியில் மனைவியை கொலை செய்த அர்ச்சகர் கைது!

    சென்னை : சென்னையில் மனைவி ஞானப்பிரியாவை நண்பருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய கோயில் குருக்கள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூல விவரங்கள் வெளியாகியுள்ளன. மனைவி தன்னை ஆண்மையற்றவன் என்று கூறியதாலேயே ஆத்திரத்தில் கொன்றதாக பாலகணேஷ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    சென்னை வடபழனியில் உள்ள சிவன் கோயிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வந்தவர் பாலகணேஷ். இவர் அதே பகுதியில் தன்னுடைய மனைவி ஞானப்பிரியாவுடன் வசித்து வந்தார். இருவருக்கும் திருமணமாகி 4 வருடங்களான போதும் குழந்தைப் பேறு இல்லாததால் இருவரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஏப்ரல் 5ம் தேதி வீட்டில் ஞானப்ரியா கைகட்டப்பட்ட நிலையில் தலையில் அடிபட்டு ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார். பாலகணேஷ் குளியல் அறையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் மயங்கிக் கிடந்தார். வீட்டு உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஞானப்பிரியாவின் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.

    நாடகமாடிய பாலகணேஷ்

    நாடகமாடிய பாலகணேஷ்

    மர்ம நபர்கள் தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக பாலகணேஷ் முதலில் போலீசாரிடம் தெரிவித்தார். ஆனால் பாலகணேஷ் சொன்னது போல மர்ம நபர்கள் யாரும் அந்த நேரத்தில் வந்து செல்லவில்லை என்பது அந்தப் பகுதியில் இருந்த 12 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது தெரிய வந்தது.

    மனைவியின் அந்த வார்த்தையால் ஆத்திரம்

    மனைவியின் அந்த வார்த்தையால் ஆத்திரம்

    இதனையடுத்து போலீசாரின் சந்தேகப் பார்வை பாலகணேஷ் மீதே திரும்பிய நிலையில் நேற்று அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் பாலகணேஷ் தான் ஞானப்பிரியாவை கொன்றார் என்பது அம்பலமானது. "குழந்தை இல்லாததால் அடிக்கடி இருவரிடையே மோதல் ஏற்பட்டதாகவும் சம்பவத்தன்று ஞானப்பிரியா குழந்தையின்மைக்கு நான் தான் காரணம் என்றும் என்னை ஆண்மையற்றவன் என்றும் கூறி இழிவுபடுத்தியதாக பாலகணேஷ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

    நண்பனின் உதவியுடன் கொலை

    நண்பனின் உதவியுடன் கொலை

    இதனால் ஆத்திரத்தில் சுத்தியலால் தலையில் அடித்ததில் ஞானப்பிரியா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இந்த கொலையில் இருந்து தப்பிக்க நண்பர் மனோஜை அழைத்து உதவி கேட்டேன். ஞானப்பிரியாவின் கைகளை கட்டிப்போட்டதோடு, என்னுடைய கைகளையும் கட்டிப்போட்டுவிட்டு மயக்க மருந்து அடித்துவிட்டு சென்றுவிடச் சொன்னே. மனோஜ் இந்த விஷயங்களை வெளியில் சொல்லாமல் இருக்க ஞானப்பிரியாவின் 15 சவரன் நகைகளை அவனுக்கு கொடுத்து அனுப்பிவிட்டு நகைக்காக நடந்த கொலை போல மாற்றியதாக பாலகணேஷ் கூறியுள்ளார்.

    பாலகணேஷ் கேட்ட கேள்வியாலே சிக்கினார்

    பாலகணேஷ் கேட்ட கேள்வியாலே சிக்கினார்

    பாலகணேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மனோஜ் கைது செய்யப்பட்டு அவர் வீட்டில் சாமி சிலைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஞானப்பிரியாவின் நகைகளும் மீட்கப்பட்டன. பாலகணேஷ் மீது போலீசின் சந்தேகப் பார்வை திரும்ப முக்கியக் காரணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண் விழித்த போது தன்னுடைய மனைவி எப்படி இருக்கிறார் என்ற கேட்டுள்ளார் இவர். அதற்கு போலீசார் அவர் நலமுடன் இருப்பதாகக் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார் பாலகணேஷ் இதன் பேரிலேயே அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததையடுத்து நடத்திய விசாரணையில் உண்மைகள் வெளிவந்துள்ளன.

    English summary
    Tamil Nadu priest conffesed that he killed his wife during quarrels over inability to have a child, and to escape from it took drama with his friend and diverted the crime as murder for jewels.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X