For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனத்தில் ரஜினி ஜரூர்... தூத்துக்குடிக்கு பொறுப்பாளர்கள் அறிவிப்பு!

நெல்லையைத் தொடர்ந்து தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகளை நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : அரசியல் கட்சிக்கான பணியின் முதற்கட்டமாக ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தும் பணியில் உள்ள ரஜினி மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். ஏற்கனவே நெல்லை மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், சட்டமன்ற தேர்தல் வந்தால் போட்டியிடுவேன் என்று கூறி இருந்தார். ரஜினி தனிக்கட்சி தான் தொடங்குவார் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

InCharges announced for Tuticorin Rajini Makkal Mandram

இதற்கு முக்கிய காரணம் கட்சிக்கான தொடக்கமாக ரசிகர் மன்றத்தை மாவட்ட வாரியாக வலுப்படுத்தி நிர்வாகிகளை நியமனம் செய்து அவர்கள் மூலம் உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ரஜினி சார்பில் ஒரு குழு மாவட்ட வாரியாக ரசிகர் மன்றத்தினருடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது.

தற்போது தமிழகத்தில் உள்ள சுமார் 60 ஆயிரம் ரஜினி மன்றங்கள் முறையான நிர்வாகிகள் இல்லாமல் உள்ளது. எனவே அந்த ரஜினி மன்றங்களுக்கு புதிய நிர்வாகிகளை இந்த குழு நியமனம் செய்து வருகிறது.

ரஜினி மன்றத்தின் செயல்பாடுகளை தீவிரப்படுத்த 32 மாவட்டங்களையும் 60 மாவட்டங்கள் போல பிரித்து செயல்பட முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் முதல் கட்டமாக 1 1/2 கோடி தொண்டர்களை உறுப்பினர்களாக சேர்க்க ரஜினி இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதன்முறையாக வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு அறிவக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளின் விவரம் இதோ:
மாவட்ட செயலாளர்- ஏ.ஜெ.ஸ்டாலின்
மாவட்ட துணை செயலாளர்கள் - டி.எஸ்.பி.எஸ். பெரிய சுவாமி நாதன், எம். முஹமது கனி ஹானியப்பா,ஆர். ரமேஷ்
இளைஞர் அணிச்செயலாளர் - ஆர்.வேல்முருகன்
மீனவர் அணிச்செயலாளர்-என்.அருண் ஆனந்த்
விவசாய அணிச்செயலாலர்- கந்த. சிவ சுப்பு
தகவல் தொழில்நுட்பத்துறை அணி சச்யலாளர்-எம். விஜய் ஆனந்த்
மகளிர் அணிச்செயலாளர்-எஸ். ராஜ லட்சுமி,
வழக்கறிஞர் அணிச்செயலாளர்-எம். செந்தில் ஆறுமுகம்
வர்த்தகர் அணிச்செயலாளர்-கே. ஜெயக்கொடி

English summary
Rajinikanth announced incharges for his Makkal Mandram of Tuticorin followed by Vellore and Thirunelveli district incharges announced.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X