இந்தா அனுப்பிட்டாங்கள்ள.. ஜெயாடிவி சிஇஓ விவேக் நாளை மறுநாள் நேரில் ஆஜராக வருமான வரித்துறை நோட்டிஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயா டிவியின் சிஇஓவான விவேக் ஜெயராமன் நாளை மறுநாள் நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

வரி ஏய்ப்பு புகாரில் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஜெயா டிவி சிஇஓவும் சசிகலாவின் அண்ணன் மகனுமான 27 வயது விவேக்கை குறி வைத்தே இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. காரணம் 27 வயதில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை குவித்ததே.

விளக்கமளித்த விவேக்

விளக்கமளித்த விவேக்

நேற்றுடன் ரெய்டு முடிந்த நிலையில் விவேக்கை அழைத்து சென்ற அதிகாரிகள் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த விவேக் வருமான வரிசோதனை குறித்து விளக்கமளித்தார்.

பதிலளிக்க தயார்

பதிலளிக்க தயார்

அப்போது ஜாஜ் சினிமாஸ், ஜெயாடிவி குறித்தும் தனது மனைவிக்கு திருமணத்தின் போது போடப்பட்ட நகைகள் குறித்தும் விசாரித்ததாக தெரிவித்தார். மேலும் வருமான வரித்துறை மீண்டும் விசாரணைக்கு அழைக்கும் என்றும் அப்படி அழைத்தால் பதிலளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மூன்று பேருக்கு நோட்டிஸ்

மூன்று பேருக்கு நோட்டிஸ்

இந்நிலையில் விவேக், திவாகரன் மற்றும் கிருஷ்ணப் பிரியா ஆகிய மூன்று பேருக்கும் வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது. அதில் நாளை மறுநாள் ஜெயா டி.வி சிஇஓ விவேக் நாளை மறுநாள் நேரில் ஆஜராக வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

தனித்தனியாக நோட்டிஸ்

தனித்தனியாக நோட்டிஸ்

இதேபோல் திவாகரன் மற்றும் விவேக்கின் சகோதரி கிருஷ்ண பிரியா ஆகியோர் நேரில் ஆஜராகவும் தனித் தனியாக நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. திவாகரன் திருச்சியிலும், விவேக், கிருஷ்ண பிரியா ஆகியோர் சென்னையிலும் ஆஜராக வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Income tax department has sent Notice to Vivek, Diwakaran and Kirshnapriya. Income tax department sent notice to each to be appeared day after tomorrow.
Please Wait while comments are loading...