For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடுதலாக வசூலித்த ரூ.2.67 லட்சம் கோடியை திருப்பி கொடுத்த வருமான வரித்துறை

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: வருமான வரித்துறை மக்களிடம் இருந்து கூடுதலாக வசூலித்த 2 லட்சத்து 67 ஆயிரம் கோடி ரூபாயை கடந்த 3 ஆண்டுகளில் திரும்பத் தந்துள்ளது.

இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2011 - 12ம் ஆண்டில் 93,814 கோடியும், 2012-13ல் ரூ.83,766 கோடியும், 2013-14ல் 89,066 கோடியும் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.

Income tax filers get refund of Rs 2.67 lakh crore in last three years

2010-11 முதல் 2012 - 13 ஆண்டுகளின்போது திரும்பத் தரப்பட்ட தொகைக்கு வட்டியாக மட்டும் 23 ஆயிரத்து 651 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது.

அதே நேரம் 2013-14ம் நிதியாண்டுக்கு அளிக்க வேண்டிய வட்டி இன்னும் பாக்கியுள்ளது. இதில் மக்களுக்கு ஏதேனும் குறைகள் தென்பட்டால் தாராளமாக புகார் அளிக்கலாம்.

மக்களுக்கு திரும்பத் தர வேண்டிய கூடுதல் வருமான வரியை விரைவாக தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வருமான வரித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English summary
Income tax filers were refunded a sum of around Rs 2.67 lakh crore as tax returns during the last three financial years.
 In 2013-14, the amount of refund paid stood at Rs 89,066 crore; Rs 83,766 crore in 2012-13 and Rs 93,814 crore was refunded in 2011-12, according to an official release.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X