For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வழக்கத்திற்கு மாறாக நள்ளிரவில் வருமான வரி சோதனை ஏன்? பரபரப்பு தகவல்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெயலலிதாவின் அறை தவிர சல்லி சல்லியாக சலித்த அதிகாரிகள் - கடித பண்டல்களை எடுத்துச்சென்றது ஏன்?

    சென்னை: வழக்கமாக ஐடி அதிகாரிகள் காலையில்தான் ரெய்டு நடத்துவது வழக்கம் என்ற நிலையில், போயஸ் இல்லத்தில் நள்ளிரவில் ரெய்டு நடத்தப்பட்டது ஏன் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

    வருமான வரித்துறை மரபுப்படி அதிகாலை அல்லது காலை 6 மணிக்கு மேல்தான் சந்தேகப்படும் நபர்கள் வீடுகளுக்கு ரெய்டுக்கு செல்வர்.

    சில நேரங்களில் இரவுவரை ரெய்டு நீடிக்கும். மறுநாள் கூட நீடிக்கும். ஆனால் ரெய்டு தொடங்குவது காலையில்தான்.

    5 நாட்கள் நடந்த ரெய்டு

    5 நாட்கள் நடந்த ரெய்டு

    ஜெயா டிவி அலுவலகம், விவேக் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் தொடர்ந்து 5 நாட்கள், ஐடி அதிகாரிகள் ரெய்டு நடத்தியிருந்தனர். அப்போதும் இரவு, பகல் பாராமல் ஷிப்ட் போட்டு பணியாற்றினர்.

    நள்ளிரவு ரெய்டு

    நள்ளிரவு ரெய்டு

    ஆனால், போயஸ் இல்லத்தில் இன்று இரவு 9 மணிக்கு மேல்தான் வருமான வரித்துறையினர் ரெய்டை ஆரம்பித்தனர். நள்ளிரவு தாண்டியும் ரெய்டு தொடர்ந்தது.

    ரொம்ப அபூர்வம்

    ரொம்ப அபூர்வம்

    இதுகுறித்து மூத்த அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். அவர்கள் கூறுகையில், இவ்வாறு திடீரென நள்ளிரவில் ஐடி ரெய்டு நடத்தப்படுவது அரிதானது என கூறினர்.

    உடனே செல்ல வேண்டிய கட்டாயம்

    துல்லியமான உளவுத்துறை தகவல்கள் கிடைக்கப்பெற்றதால்தான் இந்த ரெய்டு இரவு நடந்திருக்கும். உடனே போகாவிட்டால் ஆவணங்கள் மாற்றப்பட வாய்ப்புள்ளது என்ற தகவல்கள் அடிப்படையில்தான் ஐடி ரெய்டு நள்ளிரவில் நடைபெற்றிருக்கும் என்று தெரிகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

    English summary
    IncomeTax raids usually begin early morning. Clearly Poes Garden search is a special case as officials may get intelligence input.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X