For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுயேச்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும்: தேர்தல் ஆணையம்!

சுயேச்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சுயேச்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று நிறைவடைந்தது.

Independent candidates will be getting Symbol by shaking method: election commission

சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் விரும்பிய சின்னத்தை வேட்புமனுவில் குறிப்பிட்டு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சுயேச்சை வேட்பாளர்களான டிடிவி தினகரன், விஷால் ஆகியோருக்கு குலுக்கல் முறையில் தான் சின்னம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகரில் 63க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டால் ஒப்புகைச்சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்படாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தொப்பி சின்னத்தை பதிவு செய்துள்ள கட்சிகள் கேட்டால் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆர்.கே.நகரில் போட்டியிட விருப்பம் தெரிவித்த 30 பேரின் வேட்புமனுக்கள் இதுவரை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

English summary
Independent candidates will be getting Symbol by shaking method election commission said. Dinakaran and Vishal will be getting by shaking method.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X