For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா...விடிய, விடிய விழித்திருந்த தமிழகம்.. கவலையுடன் பிரார்த்திக்கும் அதிமுகவினர்

முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அமைதி காத்து வருவது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

By Arivalagan
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அறிய ஒட்டுமொத்த நாடும் விழித்திருந்தது. தமிழகம் தூக்கத்தைத் தொலைத்து விட்டு முதல்வர் நலம் பெற்றுத் திரும்ப பிரார்த்தபடி காத்திருந்தது.

governor

டெல்லி முதல் கன்னியாகுமரி வரை முதல்வரின் நிலை என்ன, அவர் எப்படி இருக்கிறார், அவரது உடல் நிலை இப்போது எப்படி இருக்கிறது என்பதை அறிய தூங்காமல் காத்திருந்தது.

  • டிவிட்டரிலும் முதல்வர் ஜெயலலிதா என்ற வார்த்தைதான் டிரெண்டிங்காக இருந்தது.
  • சென்னையில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.
  • அப்பல்லோ மருத்துவமனை உள்ள கிரீம்ஸ் சாலையில் அதிமுகவினர் மயமாக காணப்படுகிறது.
  • ஆயிரக்கணக்கில் அதிமுகவினர் குவிந்து வருவதால் அந்த இடமே தொடர்நது பதட்டமாக உள்ளது.
  • 300க்கும் மேற்பட்ட போலீஸார் அப்பகுதியில் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
  • அண்ணாசாலையிலும் எங்கு பார்த்தாலும் அதிமுகவினர் சாரை சாரையாக வந்தவண்ணம் உள்ளனர்.
  • ஏழைகளின் காவலர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்றுத் திரும்புவார் என தொண்டர்கள் நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர்
  • ஆண்களும், பெண்களும் கதறி அழுதபடியும் பிராத்தனை செய்தபடியும் கொட்டும் பனியிலும் அப்பல்லோ முன்பு காத்துள்ளனர்
  • முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க நேற்றிரவு அப்பல்லோவுக்கு வந்து திரும்பிய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகரிடமிருந்து இதுவரை அறிக்கை ஏதும் வரவில்லை
  • ஆளுநரின் அறிக்கைக்குப் பின்னர்தான் முதல்வரின் உடல்நிலை குறித்த தெளிவு கிடைக்கும் என்பதால் அனைவரும் காத்துள்ளனர்.
  • ஆனால் இதுவரை ஆளுநரின் அறிக்கை வெளியாகாமல் இருப்பதால் அனைவரும் தொடர்ந்து கவலையுடன் காத்துள்ளனர்.
English summary
The whole nation and the state of Tamil Nadu are awaiting for the TN Govrnor's statement on the health status of CM Jayalalitha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X