For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம், புதுச்சேரியில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை: நஜிம் ஜைதி

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு அதிகாரிகள் யாரேனும் இரு பதவிகள் வகிக்கிறார்களா என ஆய்வு செய்யப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி தெரிவித்தார்.

தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு மே 16ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பாக இன்று தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி புதுச்சேரியில் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

India election commissioner Nasim Zaidi says he will ensure money free election

ஆலோனைக்கு பிறகு நிருபர்களுக்கு நஜிம் ஜைதி செய்தியாளர்களுக்கு கூறியதாவது:

மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம், இலவசங்கள் கொடுப்பதை தடுக்க அரசியல்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அரசியல் கட்சிகளின் புகார்களை பரிசீலிப்போம். பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு அதிகாரிகள் யாரேனும் இரு பதவிகள் வகிக்கிறார்களா என ஆய்வு செய்யப்படும்.

வாக்குப் பதிவை கண்காணிக்க துணை ராணுவப் படை ஈடுபடுத்தப்படும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப்கேமரா பொருத்தப்படும். இவ்வாறு நஜிம் ஜைதி தெரிவித்தார்.

English summary
India Election commissioner Nasim Zaidi says he will ensure money free election in Tamilnadu and Puduchery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X