For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதச்சார்பின்மைக்கு ஆபத்து.. அச்சத்தில் சிறுபான்மையினர்.. வைகோ கவலை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவின் மதச்சார்பை தன்மைக்கு ஆபத்து நிலவும் சூழல் நிலவுகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மறுமலர்ச்சி தி.மு.க. சிறுபான்மை பிரிவு சார்பில், புனித ரமலான் நோன்பிருக்கும் ஏழை எளியோருக்கு உணவுப் பொருள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள இம்பீரியல் ஓட்டல் சிராஜ் மகாலில் இன்று 25.6,2015 காலை 11 மணி அளவில் நடைபெற்றது.

India face the crisis to its secularism, says Vaiko

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கலந்துகொணடு புனித ரமலான் நோன்பு நோற்கும் ஏழை எளியோருக்கு உணவுப் பொருட்கள் வழங்கினார்.

India face the crisis to its secularism, says Vaiko

அப்போது பேசிய வைகோ, நாட்டில் சிறுபான்மையின மக்களுக்கு அச்சம் நிலவுவதாக குற்றம் சாட்டினார். சிறுபான்மையினரின் அரணாக மதிமுக விளங்கும் எனவும் வைகோ தெரிவித்தார்.

India face the crisis to its secularism, says Vaiko

இந்த நிகழ்ச்சியில் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா. ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் அ.கணேசமுர்த்தி. சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளர் முராத் புகாரி. மாணவர் அணி மாநிலச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், இலக்கிய அணி மாநிலச் செயலாளர் கோட்டைசாமி, மகளிர் அணி மாநிலச் செயலாளர் குமரி விஜயகுமார், மாவட்டச் செயலாளர்கள் மத்திய சென்னை -ரெட்சன் அம்பிகாபதி. வடசென்னை ஜீவன், தென்சென்னை -வேளச்சேரி மணிமாறன், திருவண்ணாமலை- டி.ராஜா, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ், தேர்தல் பணிச் செயலாளர் கே.கழககுமார், தீர்மானக்குழு செயலாளர் ஆவடி அந்திரிதாஸ், ஆபத்து உதவிகள் அணிச் செயலாளர் பூவை கந்தன், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

English summary
MDMK leader Vaiko has said that there is a threat to secularism in India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X