For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிஜிட்டல் யுகத்திலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதா? இயக்குநர் பா.ரஞ்சித் வேதனை

டிஜிட்டல் யுகத்திலும் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுவது வேதனை அளிக்கிறது என்று இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

மதுரை: டிஜிட்டல் யுகத்தை நோக்கி நாடு முன்னேறுகின்ற வேளையில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் இழிநிலை இந்திய சமூகத்தில் தொடர்வது வேதனையளிக்கிறது என்று திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

மதுரையில் மனிதக் கழிவு அகற்றுவோர் வாழ்வுரிமை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இயக்குநர் பா.ரஞ்சித் செய்தியாளர்களிடம் கூறுகையில், சமூக சீர்திருத்தம் இன்னும் நிகழவேயில்லை. மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் இழிநிலை இன்னும் இந்திய சமூகத்தில் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.

 India is Shameless Country Says Pa.Ranjith

மனிதக் கழிவுகளை மனிதர்களே கையால் அள்ள சட்டம் அனுமதிக்கவில்லை. ஆனால் அந்த சட்டத்தை அரசாங்கம் இதுவரையிலும் நடைமுறைப்படுத்தப் படாமல் இருப்பது கவலை அளிக்கிறது. மனிதக் கழிவுகளை மனிதர்களே கையால் அள்ள சட்டம் அனுமதிக்கவில்லை. ஆனால், அந்த சட்டம் இன்னமும் நடைமுறைப்படுத்தப் படாமல் இருப்பது கவலை அளிக்கிறது.

ரொக்கமில்லா பணபரிவர்த்தனை, கறுப்புப் பண ஒழிப்பு குறித்து பேசும் இந்த காலகட்டத்தில் நாம் முதலில் மனித மனங்களில் உள்ள அழுக்கை அகற்றவதை பற்றி யோசிக்க வேண்டும். இவ்வாறு ரஞ்சித் கூறினார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை, கறுப்புப் பண ஒழிப்பு என்று இருக்கும் இந்த காலகட்டத்தில் மனிதர்களுக்கும் இருக்கும் அழுக்கை அகற்ற யோசிக்க வேண்டி உள்ளது'' என்று ரஞ்சித் கூறினார்.

English summary
Director Pa. Ranjith said on the deplorable situation of humans clearing human waste
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X