For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் இருந்து அந்தமான் சென்ற விமானப் படை விமானம் 29 பேருடன் திடீர் மாயம்- கடலில் மூழ்கியதா?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமான் சென்ற விமானப் படைக்கு சொந்தமான விமானம் திடீரென காணாமல் போனது. அந்த விமானத்தில் பயணித்த 29 பேரின் கதி என்னவென தெரியாததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மாயமான விமானம் வங்கக் கடலில் மூழ்கியிருக்கலாம் என்ற அச்சத்தில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமானின் போர்ட்பிளேருக்கு ஏ.என்.32 என்ற விமானம் இன்று காலை 8 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. நடுவானில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது காலை 8.30 மணியளவில் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

Indian Air Force AN-32 aircraft missing

தொடர்ந்தும் முயற்சித்தும் விமானத்தில் இருந்து எந்த சிக்னலும் கிடைக்கவில்லை. நடுவானில் திடீரென 29 பேருடன் விமானம் மாயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த விமானத்தில் பயணித்த 29 பேரின் கதி என்ன என்று தெரியாததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விமானம் வங்கக் கடலில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதனால் சென்னைக்கும் அந்தமானுக்கும் இடையிலான கடற்பரப்பில் மாயமான விமானம் தேடப்பட்டு வருகிறது. 2 டார்னியர் ரக விமானங்கள், 4 கடற்படை கப்பல்கள் மாயமான விமானத்தைத் தேடி வருகின்றன.

English summary
An AN-32 aircraft of Indian Air Force with 29 personnel, including six crew, on board goes missing while on its way from Chennai to Port Blair.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X