For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓகி புயல்.. நடுக்கடலில் தவித்த மீனவர்களை ஹெலிகாப்டரில் சென்று காப்பாற்றிய விமானப்படை- வீடியோ

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஓகி புயல்.. நடுக்கடலில் தவித்த மீனவர்களை ஹெலிகாப்டரில் சென்று காப்பாற்றிய விமானப்படை- வீடியோ

    திருவனந்தபுரம்/கன்னியாகுமரி: புயலுக்கு நடுவே கடலில் தத்தளித்த மீனவர்களை இந்திய விமானப்படை வீரர்கள் காப்பாற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.

    குமரியில் கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த ஒக்கி புயல் காரணமாக, தென் தமிழகம் மற்றும் கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் ஏராளமான மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன.

    Indian Air Force Helicopter rescuing stranded fishermen at Sea

    கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கைவிடுக்கப்பட்டது. இருப்பினும் ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் சிலர் வீடு திரும்பாததால் அவர்களின் குடும்பங்களில் பதற்றம் தொற்றியது.

    இதையடுத்து கடற்படையும், விமானப்படையும் மீனவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டன. கன்னியாகுமரியில் புயலால் நடுக்கடலில் சிக்கிய 42 மீனவர்கள் மீட்கப்பட்டனர். இதேபோல் கேரளாவில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர்களும் மீட்கப்பட்டனர்.

    விமானப்படை ஹெலிகாப்டர்கள், மீனவர்களின் படகுகள் பயணித்த இடத்திற்கே சென்று அவர்களை காப்பாற்றிய வீடியோ, இந்திய விமானப்படை டிவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    English summary
    Indian Air Force Helicopter rescuing stranded fishermen at Sea when Cyclone Ockhi moves.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X