For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகாவின் கார்வாரில் 346 தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி : கர்நாடக மாநிலம் கார்வார் கடற்பகுதியில் 346 தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளதாகப் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற ஏராளமான மீனவர்கள் இதுவரை வீடு திரும்பாததால், கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவி வருகிறது.

மத்திய மாநில அரசுகள் இணைந்து மீட்புப்பணிகள் மேற்கொண்டு வந்தாலும், தங்களது சொந்தங்களைக் காணாததால் மீனவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

பத்திரமான உள்ளனர்

பத்திரமான உள்ளனர்

அதில், தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவப்படகுகளில் இருந்த 346 மீனவர்கள் கர்நாடகாவின் கார்வார் கடற்பகுதியில் மீட்கப்பட்டு, தங்கவைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த 129 படகுகளில் 1247 மீனவர்கள் மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மீட்கப்பட்ட மீனவர்கள்

மீட்கப்பட்ட மீனவர்கள்

25 தமிழ்நாட்டு மீனவப்படகுகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாகவும் , கேரளாவைச் சேர்ந்த 80 படகுகளும், கர்நாடகாவைச் சேர்ந்த 45 படகுகளும் , கோவாவைச் சேர்ந்த 15 படகுகளும் அதில் இருந்த மீனவர்களும் பத்திரமாக ரத்னகிரி பகுதியில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மீட்கப்பட்ட மீனவர்கள்

25 தமிழ்நாட்டு மீனவப்படகுகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாகவும் , கேரளாவைச் சேர்ந்த 80 படகுகளும், கர்நாடகாவைச் சேர்ந்த 45 படகுகளும் , கோவாவைச் சேர்ந்த 15 படகுகளும் அதில் இருந்த மீனவர்களும் பத்திரமாக ரத்னகிரி பகுதியில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடற்படை கப்பல்களில் தேடுதல்

இந்திய கடற்படைக்குச் சொந்தமான டோர்னியர் CG 765 விமானம் உட்பட, பல இந்திய கடற்படை கப்பல்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளது. ICGS சாரதி கப்பல் நேற்று மட்டும் விழிஞ்சம் பகுதியில் 15 மீனவர்களை மீட்டு உள்ளதாகவும், ICGS ஆர்யமான், ICGS அம்ரிதியா, ICGS அபினவ் ஆகிய கப்பல்கள் மூலம் இதுவரை 46 மீனவர்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

விரைவில் மீட்கப்படுவார்கள்

தொடர்ந்து அனைத்து குழுக்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன மீனவர்களைத் தேட மூன்று ICGS கப்பல்களும், ஒரு டோர்னியர் விமானமும் கிழக்குப் பகுதிகளில் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டு வருவதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காணாமல் போன மீனவர்கள் அனைவரும் விரைவில் மீட்கப்படுவார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

English summary
Indian Coast Guard press Release says 349 Tamil Fishermen rescued in Karwar Region and operation still ON.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X