For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேற்று "மேவன்".. நாளை "மாம்".. செவ்வாயில் 'ரஜினி, கமல்'!

Google Oneindia Tamil News

சென்னை: அமெரிக்காவின் மேவான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் நுழைந்துள்ள சில நாட்களில் இந்தியாவின் மங்கள்யானும் அந்த வரிசையில் நாளை இணையவுள்ளது.

கிட்டத்தட்ட மேவானும், மங்கள்யானும் ஒரே ஆண்டில் ஒர மாதத்தில், ஓரிரு நாள் இடைவெளியில் செலுத்தப்பட்டவையாகும்.

இந்த இரண்டு விண்கலங்களும்தான் உலக விஞ்ஞானிகளின் கவனத்தை இந்த மாதம் ஈர்த்த முக்கிய அம்சங்களாகும்.

மேவானை விட மங்கள்யான் தயாரிப்புச் செலவிலும், பிற அம்சங்களிலும் மேவானை விட சிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் - ரஜினி மாதிரி

கமல் - ரஜினி மாதிரி

கிட்டத்தட்ட கமல், ரஜினி மாதிரி என்று இந்த இரண்டு விண்கலங்களையும் சொல்லலாம். ஒவ்வொன்றும் ஒரு வகையான சிறப்புடன் கூடியவை. அதை விட முக்கியமானது, "பெரியண்ணன்" அமெரிக்கா அனுப்பிய விண்கலத்தைத் தொடர்ந்து நமது விண்கலமும் செவ்வாயின் ஏரியாவில் கால் வைப்பது நமக்குப் பெருமைதானே!

"மாம்".. அதாவது மங்கள்யான்

இந்தியாவின் செவ்வாய் கிரக ஆய்வுக் கலமானது மங்கள்யான் என்று அழைக்கப்பட்டாலும் கூட அது இஸ்ரோ வைத்த பெயர் அல்ல.. அனைவரும் சேர்ந்து வைத்த செல்லப் பெயர்தான். அதன் அறிவியல் பெயர் வெறும் மார்ஸ் ஆர்பிட்டார் மிஷன் (Mars orbiter mission - MOM) என்பது மட்டுமே.

மேவன் என்றால்

மேவன் என்றால்

அமெரிக்காவின் மேவன் விண்கலத்தின் முழுப் பெயர் மார்ஸ் அட்மாஸ்பியர் அன்ட் வாலடைல் எவலூஷன் என்பதாகும்.

முதல் முயற்சியில் ..மாம்

முதல் முயற்சியில் ..மாம்

இந்தியாவின் மங்கள்யான், முதல் முயற்சியாகும். செவ்வாய் கிரக ஆய்வுக்காக இந்தியா அனுப்பிய முதல் விண்கலம் இதுதான்.

15வது முயற்சி மேவன்

15வது முயற்சி மேவன்

அதேசமயம், மேவன் விண்கலமானது 15வது முயற்சியாகும். இதில் முதல் 6 முயற்சிகள் தோல்வியில் முடிந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

தோல்வியைப் பார்த்துப் பாடம் கற்ற மாம்

தோல்வியைப் பார்த்துப் பாடம் கற்ற மாம்

பல்வேறு நாடுகளின் செவ்வாய் கிரக மிஷன்களைப் பார்த்தும், அதன் தோல்விகளுக்கான காரணம், வெற்றிக்கான காரணம் உள்ளிட்டவற்றைப் பார்த்து அந்தத் தவறுகளையெல்லாம் சரி செய்து உருவாக்கப்பட்டது நமது மங்கள்யான்... எனவே இதில் தவறுகள் மிகக் குறைவே.

மங்கள்யான் செலவு

மங்கள்யான் செலவு

மங்கள்யானுக்கான மொத்த செலவுத் தொகையானது 75 மில்லியன் டாலராகும். அதாவது தோராயமாக 456.54 கோடியாகும்.

மேவன் செலவு ஜாஸ்தி

மேவன் செலவு ஜாஸ்தி

அதேசமயம் மேவனின் செலவுத் தொகையானது 671 மில்லியன் டாலராகும். மங்கள்யானை விட பல மடங்கு அதிகம் இது.

நெருக்கம் சற்று குறைவுதான்

நெருக்கம் சற்று குறைவுதான்

மேவனைப் பொருத்தவரை அது செவ்வாய் கிரகத்திலிருந்து 150 கிலோமீட்டர் உயரம் வரை நெருங்கிச் செல்ல முடியும். அதேசமயம், நமது மங்கள்யானின் தூரமானது 377 முதல் 423 கிலோமீட்டராக இருக்கும். இதனால் மேவன் விண்கலமானது செவ்வாய் கிரகத்தை நம்மை விட சற்று அருகே போய்ப் பார்க்க முடியும்.

பே லோடுகள் வேறு வேறு

பே லோடுகள் வேறு வேறு

இரு விண்கலங்களின் இலக்குகளும், வேலைகளும் வேறு வேறு என்பதால் அவற்றின் பே லோடுகளும் கூட வேறு வேறானவையாகவே உள்ளன.

பெருமை நமக்குத்தான்

பெருமை நமக்குத்தான்

எப்படி இருந்தாலும் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் எல்லையைத் தொட்ட சாதனையை மங்கள்யான் பெறவுள்ளது என்பது நமக்கு பெருமைதான்.

English summary
India's 'MOM', well known as Mangalyan and the US's 'MAVEN' are the cynosure of all eyes in the word this month. But what is special between these two 'Mars stars'.?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X