For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன ரெட்டி சார்... அப்பல்லோவில் சிசிடிவி கேமராவே இல்லன்னு சொன்னீங்க?

அப்பல்லோவில் சிசிடிவி கேமராவே இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறிய நிலையில் தற்போது அங்குள்ள சர்வர்களில் ஒரு மாத பதிவுகள் மட்டுமே சேமித்து வைக்க முடியும் என தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்திய

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெயலலிதா சிகிச்சை சிசிடிவி வீடியோ அழிந்துவிட்டது - அப்பல்லோ

    சென்னை: அப்பல்லோவில் சிசிடிவி கேமராவே இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறிய நிலையில் தற்போது அங்குள்ள சர்வர்களில் ஒரு மாத பதிவுகள் மட்டுமே சேமித்து வைக்க முடியும் என தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்தார். 2016 டிசம்பர் 5ஆம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது.

    அன்று முதலே அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பி வந்தன. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

    விசாரணை

    விசாரணை

    ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அப்பல்லோ மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள், சசிகலா குடும்பத்தினர் என பலரிடமும் விசாரணை ஆணையம் தொடர்ந்து விசாரித்து வருகிறது.

    [ஜெ. சிகிச்சை.. எல்லா சிசிடிவி பதிவும் அழிஞ்சு போச்... குண்டைத் தூக்கிப் போட்ட அப்பல்லோ!! ]

    கேமராக்கள் இல்லை

    கேமராக்கள் இல்லை

    இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிசிச்சைகள் குறித்த வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை வெளியிடுமாறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அப்போது அப்பல்லோ மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்தது.

    கேமராக்கள் வைப்பதில்லை

    கேமராக்கள் வைப்பதில்லை

    அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியும் செய்தியாளர் சந்திப்பின் போது ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்று அடித்து கூறினார். முக்கிய பிரமுகர்கள் சிகிச்சை பெறும் பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைப்பதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

    புதிதாக பதிவுகள் வரும்போது

    புதிதாக பதிவுகள் வரும்போது

    இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி. சர்வர்களில் ஒரு மாத பதிவுகள் மட்டுமே சேமித்து வைக்க முடியும் என விசாரணை கமிஷனில் அப்பல்லோ நிர்வாகம் பதில் அளித்துள்ளது. அதற்கு மேல் சேமிக்க முடியாது என்றும் புதிதாக பதிவுகள் சேரும்போது பழைய பதிவுகள் தானாகவே அழிந்து விடும் என்றும் கூறியுள்ளது.

    ஜெ.சிகிச்சை வீடியோ

    ஜெ.சிகிச்சை வீடியோ

    இதனால் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி. டி.வி. வீடியோ பதிவுகள் அழிந்து விட்டதாகவும், அதன் காரணமாகவே வீடியோ பதிவுகளை தாக்கல் முடியவில்லை என்றும் கூறியுள்ளது அப்பல்லோ நிர்வாகம்.

    மர்ம முடிச்சுகள்

    மர்ம முடிச்சுகள்

    அப்பல்லோ நிர்வாகத்தின் இந்த முன்னுக்குப்பின் முரணான பதிலால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா இறந்து 2 ஆண்டுகள் முழுமையாக நிறைவடைய உள்ள நிலையில் அவரது மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் மட்டும் இன்னும் அவிழ்க்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Apollo hospital says Jayalalitha treatment videos has been destroyed. Apollo server can save videos for one month only said Apollo hospital. Initially Apollo hospital management was saying there is no CCTV Camera in Apollo hospital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X