For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாகித்ய அகாதமி விருதை வாங்க கவிஞர் இன்குலாபின் குடும்பத்தினர் மறுப்பு

சாகித்ய அகாதமி விருதை வாங்க மறைந்த கவிஞர் இன்குலாபின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: சாகித்ய அகாதமி விருதை வாங்க மறைந்த கவிஞர் இன்குலாபின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

2017-ம் ஆண்டின் சாகித்ய அகாதமி விருது மறைந்த மக்கள் கவிஞர் இன்குலாப் மற்றும் எழுத்தாளர் யூமா வாசுகிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் யூமா வாசுகிக்கு, கதாக்கின் இதிகாசம் எனும் மலையாள நூல் மொழிபெயர்ப்புக்கு சாகிதிய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.

Inquilab family refused to Sahitya Akademi award for this year

மறைந்த மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு காந்தள் நாட்கள் என்கிற கவிதை தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விருதை வாங்க மறைந்த கவிஞர் இன்குலாபின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

மேலும் சாகித்ய அகாடமி விருதை ஏற்க மறுத்து இன்குலாப்பின் குடும்பத்தினர் கூட்டாக அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவரது குடும்மபத்தினர் ''இவ்விருதை ஏற்றுக்கொள்வது இன்குலாப் வாழ்ந்த வாழ்க்கைக்கும், எழுதிய எழுத்துக்களுக்கும் துரோகம் இழைப்பதாகும்'' என்று பேசியுள்ளனர்.

English summary
Makkal Kavignar Inquilab and Tamil writer Yuma Vasuki have been selected for Sahitya Akademi award for this year. At the same time Inquilab family refused to Sahitya Akademi award for this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X