For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. மரணத்தில் உள்ள உண்மை வெளிச்சத்திற்கு வரும்: மாஜி அமைச்சர் பொன்முடி வரவேற்பு

விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மை வெளிவரும் என திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மை வெளிவரும் என திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் அடைந்து 10 மாதங்கள் ஆகவுள்ள நிலையில் அவரது மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகாமலே உள்ளது. இந்நிலையில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக மூத்த தலைவர்கள் சசிகலா குடும்பத்தினர்தான் ஜெயலலிதாவை கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

Inquiry should be conducted neutrally : Former minister Ponmudi

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.

இதற்கு திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி வரவேற்பு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதலில் நீதி விசாரணை கோரியது திமுகதான் என்றும் அவர் கூறினார்.

மேலும் விசாரணை உண்மையான முறையில் நடுநிலையோடு நடைபெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். விசாரணை கமிஷன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மை வெளிச்சத்திற்கு வரும் என நம்புவதாகவும் முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறினார்.

English summary
Jayalalithaa death case Commission has been set up. The High Court Judge Arumugasamy is headed by the Government of Tamil Nadu.Former DMK Minister Ponmudi welcomes commission for Jayalalitha death case. He said that inquiry should be conducted neutrally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X