For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கள்ளிப்பால் மறுபக்கம்.. காமுகர்கள் வேட்டை இன்னொரு பக்கம்.. #InternationalDayoftheGirlChild

நாடு முழுவதும் இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: சர்வதே பெண் குழந்தைகள் தினம் இன்று!!

பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை கூட விட்டு வைக்காத சில காமுகர்கள் நடமாடும் சமுதாயம் இது.. நம்ம நாட்டில், நம்ம ஊரில், நம்ம தெருவில், நம் வீட்டு குழந்தைகளை நடமாட விட முடியாத அவலம் நாளுக்கு நாள் அரங்கேறி வருகிறது.

[அதிமுக உறுப்பினர் அட்டையை புதுப்பித்த ஃபிடல் கேஸ்ட்ரோ.. சேகுவேரா.. நெட்டிசன்ஸ் மரண கலாய்!!]

 ஹாசினி, ஆசிபா

ஹாசினி, ஆசிபா

இதற்கு நம்ம ஊர் உதாரணமாக போரூர் ஹாசினி, அயனாவரம் வாய் பேச முடியாத சிறுமி முதற்கொண்டு வெளிமாநில சிறுமியான ஆசிபா வரை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த குழந்தைகளை நம்மால் அத்துணை சீக்கிரமாக மறந்துவிட முடியுமா, அல்லது அந்த கயவர்களைதான் மன்னித்துவிட முடியுமா?

 ஜீரணிக்க முடியவில்லை

ஜீரணிக்க முடியவில்லை

இது உலகம் முழுதும் உள்ள பிரச்சனைதான். ஆனால் நம் நாட்டில் இது பெரிதாக எடுத்துக் கொண்டு மனம் வெம்பி துடிக்க காரணம், பண்பாடு, கலாச்சாரம், கற்பு, ஒழுக்கம் என்பது பின்னிப் பிணைந்து நாம் கிடப்பதால்தான் இந்த விஷயங்களை நம்மால் ஜீரணிக்க முடியாமல் போகிறது.

 குழந்தை திருமணம்

குழந்தை திருமணம்

எனவே பெண் குழந்தைகள் உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளை முன்னிலைப்படுத்தவே இந்த தினம் உருவாக்கப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்னமும்கூட நம் நாட்டில் குழந்தை திருமணங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.

 குட் டச், பேட் டச்

குட் டச், பேட் டச்

5 வயது மகளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதிலே நிறைய அம்மாக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். "செல்போனில் என் மகள் என்னென்னமோ தெரிஞ்சு வச்சிக்கிட்டிருக்கா... நமக்குகூட அவ்வளவு விஷயம் தெரியறது இல்லைன்னு" என்று பூரித்து போகும் அம்மாக்களில் பலர், தங்கள் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் எது என்பதை விரிவாக சொல்லித் தருவதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதே யதார்த்தம்.

 கள்ளிப்பால் கலாச்சாரம்

கள்ளிப்பால் கலாச்சாரம்

அதேபோல எங்கோ ஒரு மூலையில் கள்ளிப்பால் கலாச்சாரமும் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது. போக்சோ சட்டத்தை முன்னிறுத்தி காட்டினாலும், அதற்கெல்லாம் அசராமல், அஞ்சாமல் குழந்தைகளின் பாலியல் குற்றங்கள் பெருகி கொண்டுதான் இருக்கிறது. எனவே இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இருந்து பெண்கள் விழித்துக்கொள்ளவும் தங்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை, மற்றும் அடக்குமுறைகளை எதிர்த்து போராடவும் வேண்டியது இன்றைய உலகில் மிகவும் அவசியம்.

 வலிமை உணர வேண்டும்

வலிமை உணர வேண்டும்

அதோடு பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையின் திட்டமிடலும் அத்தியாவசியமாகி விட்டது. "பெண்ணியம் என்பது பெண்களை வலிமையாக்குவதற்கு இல்லை. பெண்கள் ஏற்கனவே வலிமையானவர்கள் தான். உலகம் அந்த வலிமையை உணர்ந்துகொள்ளும் விதத்தை இது மாற்றியது." என்று ஆண்டர்சன் சொன்ன கருத்துக்களின் ஆழத்தை உலகில் உள்ள அத்தணை பெண் குழந்தைகளும் முன்னெடுத்து செல்லட்டும்!!

English summary
International Day of the Girl Child Today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X