For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செப்டம்பர் 22ல் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

By Siva
Google Oneindia Tamil News

திருச்சி: வரும் செப்டம்பர் மாதம் 22ம் தேதி திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

22.09.2015 அன்று திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் முதுகலைத் தமிழாய்வுத்துறை சார்பில் நடைபெற உள்ளது. தமிழ்ச் சமூகம் - கலாச்சாரம் - கல்வி - வணிகம் - இலக்கியங்களில் தகவல் தொடர்புச் சாதனங்களின் தாக்கமும் மாற்றமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

International seminar in Trichy Jamal Mohamad college on Sept. 22nd

கருத்தரங்கில் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கலந்து கொண்டு ஆய்வுரை வழங்கலாம். இவ்விழாவில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் இருந்து பல்வேறு தமிழறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கட்டுரை வழங்க உள்ளனர். இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு கட்டுரை படிக்க அனைவரையும் முதுகலைத் தமிழாய்வுத் துறையினர் அழைக்கின்றனர்.

  • ஆய்வுக்கட்டுரை ஏ 4 தாளில் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • பாமினி எழுத்துருவில் தட்டச்சிட்டு மின்னஞ்சலில் கட்டுரையை அனுப்பலாம்
  • பேராளர் கட்டணம் ரூ. 750 - 00 (அயல்நாட்டினருக்கு 12 அமெரிக்க டாலர்)
  • ஆய்வாளர்கள் ரூ. 500 -00 (அயல்நாட்டினர் 8 டாலர்)
  • கட்டணம், கட்டுரை அனுப்ப இறுதிநாள்: 01.09.2015

பேராளர் கட்டணம் திருச்சிராப்பள்ளியில் மாற்றும் வகையில் வரைவோலையாக Head, Department of Tamil, Jamal Mohamad College, Trichirapalli என்ற பெயரில் அனுப்பலாம்.

தொடர்புக்கு:

முனைவர் க. சிராஜுதீன்,
துணைப் பேராசிரியர்,
முதுகலை - தமிழாய்வுத்துறை,
ஜமால் முகமது கல்லூரி,
திருச்சிராப்பள்ளி - 620 020

தொலைபேசி: 0091 98657 21142
[email protected]

http://muelangovan.blogspot.in/

English summary
Tamil research department of Trichy Jamal Mohamad college has arranged for an international seminar on september 22nd in the college campus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X