யோகா தினம்.. முட்டியை மடக்கி, கலக்கும் பொன்.ராதாகிருஷ்ணன்.. சம்மனம் போட்டு தியானித்த விஜயபாஸ்கர்
Recommended Video
நாகர்கோயில்: சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாகர்கோவில், எஸ்.டி.ஹிந்து கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக சீனியர் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் யோகாசனம் செய்தார்.
#InternationalYogaDay
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) June 21, 2018
Let this #InternationalYogaDay2018 inspire all of us to stay fit healthy in mind & body - practice Yoga. #InternationalYogaDay2018 at S.T.Hindu college, Nagercoil. pic.twitter.com/JnbHHNKPpz
66வதாகும் பொன்.ராதாகிருஷ்ணன் அசத்தலாக யோகாசனம் செய்துள்ளார். அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
வயதானதும் முட்டியை மடக்க முடியாது என்பது போன்ற தொந்தரவுகள் ஏற்படுவது வழக்கம். ஆனால் யோகா செய்வதை வழக்கமாக கொண்டுள்ள பொன்.ராதாகிருஷ்ணன் அசத்தலாக முட்டியை மடக்கியபடி அமர்ந்து யோகாசனம் செய்கிறார்.
— Dr.C.Vijayabaskar (@VijayabaskarDr) June 21, 2018
இதேபோல தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்தார்.
சம்மணம் போட்டு அமர்ந்து, கால் மீது கால் தூக்கி போட்டு என பல வகைகளில் தான், ஆரோக்கிய துறையை நிர்வகிக்கும் தான், உடல்ரீதியாகவும் ரொம்பவே ஃபிட்டான அமைச்சர் என காண்பித்தார் விஜயபாஸ்கர்.