For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை முடக்கம்! அரசு உத்தரவால் பரபரப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    இன்டர்நெட் சேவை முடக்கம் | தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாற்றம்- வீடியோ

    சென்னை: தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் மக்கள் போலீசாரால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதால் அதை நேரடியாக காண்பித்த பல டிவி சேனல்கள் அரசு கேபிளில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.

    இருப்பினும் இணையதளங்கள் வழியாக மக்கள் அங்கு நடக்கும் செய்திகளை அறிந்து வந்தனர். ஆனால், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் வழியாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் போராட்டம் குறித்த செய்திகள் பரவுவதால் போராட்டம் கட்டுக்குள் வரவில்லை என கூறப்படுகிறது.

    Internet service is been cut off in southern districts

    இதை தடுக்கும் நோக்கத்தில், மாநில உள்துறை அமைச்சகம், மேற்கண்ட மூன்று மாவட்டங்களிலும், இணையதள சேவையை துண்டிக்க இன்று மாலை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அம்மாவட்ட மக்கள் டிவி, பத்திரிகை மீடியாக்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    இணையதள சேவை துண்டிக்கப்பட்டால், மக்கள் தங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை வெளி உலகிற்கு புகைப்படம், வீடியோ ஆதாரத்தோடு வெளியிட முடியாத சூழல் உருவாகும். இது மக்கள் மீதான அடக்குமுறையை அதிகரிக்க வகை செய்ய கூடும் என்று மனிதநேய ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

    English summary
    Internet service is been cut off in southern districts, including Tuticorin.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X