For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடியில் இன்று இரவில் இருந்து இணைய சேவை.. டிஜிபி ராஜேந்திரன் அறிவிப்பு

தூத்துக்குடியில் இன்று நள்ளிரவு முதல் இணையதள சேவை சரியாகும் என்று போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடியில் இன்று நள்ளிரவு முதல் இணையதள சேவை சரியாகும் என்று போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராட்டம் செய்த அப்பாவி மக்கள் மீது போலீஸ் மூர்க்கமாக துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த மோசமான தாக்குதல் காரணமாக 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

Internet will resume in Tuticorin today as 144 lifted, says DGP

பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.இதில் இதுவரை மாநில அரசு இதில் பெரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்ததை அடுத்த மூன்று மாவட்டங்களில் இணைய சேவை ரத்து செய்யப்பட்டு இருந்தது. இது பெரிய அளவில் பிரச்சனையை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இணையதள சேவை தடை செய்யப்பட்டு இருந்தது.

இதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மூன்று மாவட்டங்களில் ஏன் இணைய சேவை ரத்து செய்யப்பட்டது என்று நீதிமன்றம் தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு இருந்தது. இதனால் தமிழக அரசு உடனடியாக மூன்று மாவட்டங்களுக்கும் மீண்டும் இணைய சேவை வழங்கியது,.

ஆனாலும் தூத்துக்குடியில் இணைய சேவை பல ஊர்களில் செயல்படாமல் இருந்தது. தற்போது தூத்துக்குடியில் இன்று நள்ளிரவு முதல் இணையதள சேவை சரியாகும் என்று போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரியுடன் நடந்த ஆலோசனைக்குப் பின்னர்இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

English summary
Internet will resume in Tuticorin as 144 lifted, says DGP. There was no internet for last 4 days in the district after police shooting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X