For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐபிஎல் தொடரில் அதிக ரன் விளாசிய டாப் 10 டீம் இவைதான்.. சென்னை எத்தனை முறை தெரியுமா?

அதிக ஸ்கோரை விளாசி ரசிகர்களை குஷிப்படுத்திய டாப் 10 அணிகள் பற்றிய பார்வை உங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. இதில் பெங்களூர் அணியின் ஆதிக்கம் அதிகம் உள்ளது.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஐபிஎல் திருவிழா தொடங்கி 10 வருடங்கள் ஆகும் நிலையில் அதுத உலக அளவிலான டி20 போட்டிகளில் மிகப்பெரிய பெருமையை பெற்றுள்ளது.

குறுகிய காலத்தில் ஐபிஎல் அடைந்த உயரங்கள் ஏராளம். இதற்கு காரணம், இங்கு விளாசப்படும் பவுண்டரிகளும், சிக்சர்களும்தான்.

அதிக ஸ்கோரை குவிப்பது அதை துரத்தி பிடிப்பதும் இங்கு ரசிகர்களை சீட் நுனியில் கட்டிப்போட வைக்கும் மந்திரங்கள். இப்படி அதிக ஸ்கோரை விளாசி ரசிகர்களை குஷிப்படுத்திய டாப் 10 அணிகள் பற்றிய பார்வை உங்களுக்காக.

பெங்களூர் இதிலும் டாப்

பெங்களூர் இதிலும் டாப்

நடப்பு சீசனில் 49 ரன்களில் ஒரு போட்டியில் ஆல்அவுட்டாகி, குறைந்த ஸ்கோரை பதிவு செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, அதிக ஸ்கோர் விளாசிய அணிகள் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்லது. 2014ல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கெய்ல் மட்டுமே 175 ரன்களை விளாசினார். 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு பெங்களூர் அணி 263 ரன்களை விளாசியது. இதுவரை ஐபிஎல் தொடரில் அதிக ரன் இதுதான்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

2வது பெரிய ஸ்கோரை விளாசிய அணி வேறு யாருமல்ல, ரசிகர்களால் பெரிய விசில் அடிக்கப்படும், சென்னை சூப்பர் கிங்ஸ்தான். 2010ல் டோணி அணி, ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிராக 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ரன்களை விளாசி ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்தது. ஆனால் ராஜஸ்தான் அணியும் லேசுப்பட்டதில்லை. விரட்டி வந்தபோதிலும், 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையிடம் தோற்றது.

மீண்டும் சென்னை

மீண்டும் சென்னை

அட, 3வது இடமும் சென்னை சூப்பர் கிங்சுக்குத்தான். 2008ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக 240 ரன்கள குவித்திருந்தது சிஎஸ்கே. 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.

இம்முறை பெங்களூர்

இம்முறை பெங்களூர்

2015 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்சுக்கு எதிராக பெங்களூர் அணி 235 ரன்களை குவித்தது. இழந்ததோ வெறும் 1 விக்கெட்டைத்தான். விராட் கோஹ்லி 82, டிவில்லியர்ஸ் 133 ரன்கள் குவித்து நாட்அவுட்டாக 215 ரன் பார்ட்னர்ஷிப்புடன் களத்தில் நின்றனர்.

பஞ்சாப் அதிரடி

பஞ்சாப் அதிரடி

இதேபோல பெங்களூர் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி 2011ல் நடந்த தொடரில் 232 ரன்கள் குவித்தது. கில்கிறிஸ்ட் சதம் விளாசினார். இதில் 111 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றது.

மீண்டும் பஞ்சாப்

மீண்டும் பஞ்சாப்

2014ல் நடந்த போட்டியில், சிஎஸ்கே அணிக்கு எதிராக பஞ்சாப் அணி, 231 ரன்களை குவித்தது. சென்னை அணி துரத்தி சென்று 187 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

டெல்லி சபாஷ்

டெல்லி சபாஷ்

2011ல் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, பஞ்சாப்புக்கு எதிராக 231 ரன்கள் குவித்தது. சேவாக், வார்னர் அரை சதம் விளாசியிருந்தனர். டெல்லி 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பெங்களூரின் இரு தூண்கள்

பெங்களூரின் இரு தூண்கள்

கடந்த வருட ஐபிஎல் சீசனில், ஹைதராபாத் அணிக்கு எதிராக பெங்களூர் அணி, 227 ரன்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் 82, கோஹ்லி 75 ரன்களை குவித்திருந்தனர். பெங்களூர் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கெய்ல் புயல்

கெய்ல் புயல்

பஞ்சாப் அணிக்கு எதிராக பெங்களூர் அணி 2015ல் 226 ரன்களை குவித்தது. கெய்ல் 117 ரன்கள் விளாசியிருந்தார். ஆர்.சி.பி அணி 138 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பஞ்சாப்

பஞ்சாப்

சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிராக 2014ல் பஞ்சாப் அணி 226 ரன்களை குவித்தது. சேவாக் 58 பந்துகளில் 122 ரன்களை விளாசியிருந்தார். சென்னையும் விடவில்லை. 202ரன்களை தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த ஸ்கோரில் ஆல்அவுட்டானபட்டியலிலும் சரி, அதிக ஸ்கோரை குவித்த பட்டியலிலும் சரி பெங்களூர் அணி அதிக இடங்களை பிடித்துள்ளது.

English summary
As Indian Premier League enters its tenth year we look at the 10 highest team totals in the history of the IPL.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X