For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போராட்ட களேபரம்.. அவசரத்தில் அம்பயரை ஹோட்டலிலேயே விட்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்! தாமதமான டாஸ்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    CSK ரசிகர்களை விரட்டி விரட்டி வெளுத்த போராட்டக்காரர்கள்- வீடியோ

    சென்னை: அவசரத்தில் அம்ப்யரை அழைத்து செல்ல மறந்ததுவிட்டது ஐபிஎல் நிர்வாகம். இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    ஐபிஎல் போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த கூடாது என காவிரி ஆதரவு போராட்டக்காரர்கள் கோரிக்கையாக உள்ளது. இதையடுத்து இன்று அண்ணா சாலையில் பெரும் போராட்டம் வெடித்தது. போலீசார் தடியடி நடத்தினர்.

    IPL officers forgot to take Umpires to the Chepauk ground

    இந்த நிலையில், பலத்த பாதுகாப்புக்கு நடுவே எப்படியோ சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா வீரர்களை ஹோட்டல்களில் இருந்து பத்திரமாக மைதானத்திற்கு அழைத்து வந்துவிட்டது ஐபிஎல் நிர்வாகம்.

    ஆனால், அவசரத்தில் அம்பயர்களை அழைத்துவர ஐபிஎல் நிர்வாக அதிகாரிகள் மறந்துவிட்டனர். இதனால் 7.30 மணிக்கு டாஸ் போட முடியவில்லை. இதன்பிறகு அம்பயர்கள் தங்கியுள்ள எழும்பூரிலுள்ள ஹோட்டலுக்கு அவசரமாக கார் அனுப்பப்பட்டது.

    நடுவர்கள் வந்த பிறகே டாஸ் போடப்படும் என்பதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், ஐபிஎல் போட்டியை பார்க்க மைதானத்திற்கு வந்த ரசிகர்கள் மட்டுமின்றி, உலகமெங்கிலும் ஐபிஎல் போட்டியை டிவிகளில் பார்க்கும் பல நாட்டு ரசிகர்களும் போட்டி தாமதமாக தொடங்குவதற்கான காரணம் தெரியாமல் குழப்பத்தில் இருந்தனர்.

    ஒருவழியாக 7.50 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸில் வென்ற டோணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். ஐபிஎல் வரலாற்றிலேயே அம்பயரை மறந்து விட்டு வந்தது இதுதான் முதல் முறையாம்.

    English summary
    The IPL administration has forgotten to take Umpires to the Chepauk ground.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X