For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூகுள் உங்களை பின்தொடர்கிறதா?.. உருவான புதிய சர்ச்சை!

கூகுள் மக்களின் அனுமதி இல்லாமல் அவர்களின் இருப்பிடத்தை ஆராய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: கூகுள் மக்களின் அனுமதி இல்லாமல் அவர்களின் இருப்பிடத்தை ஆராய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கூகுள்தான் உலகம் என்று கிட்டத்தட்ட மாறிவிட்டது. கூகுள் இல்லாமல் அணுவும் அசையாது என்ற நிலை வந்துவிட்டது. உலகில் பெரும்பாலான மக்கள் கூகுளை பின்தொடர ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த நிலையில்தான் முதல்முறையாக கூகுள் சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளது. கூகுளில் மேப்பில் இருக்கும் அம்சம் ஒன்று, அந்த நிறுவனத்தை பிரச்சனையில் சிக்க வைத்துள்ளது.

கூகுள் எப்படி செயல்படுகிறது

கூகுள் எப்படி செயல்படுகிறது

கூகுள் மேப் அப்ளிகேஷனை எல்லோரும் பயன்படுத்துவோம். ஜிபிஎஸ் மூலம் இயங்கும் இந்த ஆப், நம் இருப்பிடத்தை துல்லியமாக கண்டுபிடிக்கும். இந்த நம் இருப்பிடத்தை கண்டறியும் ஜிபிஎஸ் வசதியை நாம் ஆன், ஆப் செய்து கொள்ள முடியும். தேவையில்லாத சமயங்களில் ஆப் செய்து, கூகுள் நம்முடைய இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியாதபடி செய்து விடலாம்.

ஆனாலும்

ஆனாலும்

ஆனாலும் இந்த மேப்பில் உள்ள ஜிபிஎஸ்ஸை ஆப் செய்த பின்பும் கூட, கூகுள் நம்முடைய இருப்பிடத்தை கண்டுபிடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது நாம் எங்கே செல்கிறோம், என்ன செய்கிறோம் என்று நம்முடைய அனுமதி இல்லாமலே கூகுள் தேடி தேடி கண்டுபிடிக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாம் செல்லும் எல்லா இடங்களும் அதற்கு தெரியும் என்று கூறப்படுகிறது.

யார் கண்டுபிடித்தார்கள்

யார் கண்டுபிடித்தார்கள்

அசோசியேட் பிரஸ் என்ற இயக்கம் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறார்கள். 100கும் அதிகமான நபர்களின் மொபைலை வாங்கி, அவர்களின் மொபைலில் ஜிபிஎஸ்ஸை ஆப் செய்துவிட்டு, கூகுள் இருப்பிடத்தை கண்டுபிடிக்கிறதா என்று சோதனை செய்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதன்படி, உண்மையாக கூகுள் இப்படி செய்கிறது என்று கூறியுள்ளனர்.

உண்மை என்ன

உண்மை என்ன

இந்த குற்றச்சாட்டு இப்போதுதான் வெளியே வந்துள்ளதால் இது எந்த அளவிற்கு உண்மை என்ற விவரம் வெளியாகவில்லை. கூகுள் இதற்கு விரைவில் விளக்கும் அளிக்கும் என்று கூறப்படுகிறது. பொதுவாக கூகுள் மக்களின் தகவல் சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கும் என்பதால், இந்த தவறை செய்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

English summary
Is buddy google following you without your concern? What is the Truth?.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X