For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போன வருஷம் மாதிரி மழை வந்தா செத்தோம்... சென்னை மக்கள் அச்சம்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையை கடந்த வருடம் உலுக்கி எடுத்த பெரு மழையையும், தொடர் வெள்ளத்தையும் யாரும் மறந்திருக்க முடியாது. இதோ அடுத்த பருவ மழை இன்னும் 2 மாதங்களில் வரப் போகிறது. ஆனால் நாம் கடந்த கால பாதிப்பிலிருந்து பாடம் கற்றுள்ளோமா?

இல்லை என்று சென்னை மக்கள் ஒருமித்த குரலில் உரக்கச் சொல்கிறார்கள். குறிப்பாக அரசுத் தரப்பிலிருந்து எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மக்களின் ஆணித்தரமான கருத்தாக உள்ளது.

கடந்த மழைக்காலத்தில் எங்கெல்லாம் பாதிப்பு ஏற்பட்டதோ, எதனால் பாதிப்பு ஏற்பட்டதோ அந்தக் காரணங்கள் இன்னும் அப்படியேதான் உள்ளன. கால்வாய் ஆக்கிரமிப்புகள் பெரும்பாலும் இன்னும் அப்படியேதான் உள்ளன. ஒப்புக்கு கடந்த வருடம் சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். ஆனால் அரசியல்வாதிகளின் குறுக்கீடு காரணமாக இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி அப்படியே நின்று போய் விட்டதாக மக்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

பேய் மழையும்.. பெரு வெள்ளமும்

பேய் மழையும்.. பெரு வெள்ளமும்

கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியிலும், டிசம்பர் மாதத் தொடக்கத்திலும் பெய்த பெரும் மழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலும் கன மழை கொட்டித் தீர்த்து மக்களின் இயல்பு வாழ்க்கையை தடம் புரளச் செய்தது.

திடீர் வெள்ளம்

திடீர் வெள்ளம்

சென்னையில் இரவில் திறந்துவிடப்பட்ட ஏரி நீர் காரணமாகவும், தொடர் மழை காரணமாகவும் நகரமே மூழ்கிப் போனது. பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டனர். பல கோடி அளவுக்கு பொருள் இழப்பு ஏற்பட்டது. சென்னையே நீரில் மிதந்தது.

கால்வாய் ஆக்கிரமிப்புகள்

கால்வாய் ஆக்கிரமிப்புகள்

சென்னையை வெள்ளம் இந்த அளவுக்குப் பாதிக்க முக்கியக் காரணமே ஆக்கிரமிப்புகள்தான். நீர் நிலைகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நீர்ப் போக்கு கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் கால்வாய்களே இல்லை என்ற நிலை.

ஆக்கிரமிப்பு அகற்றம் கண் துடைப்பு

ஆக்கிரமிப்பு அகற்றம் கண் துடைப்பு

வெள்ள பாதிப்பைத் தொடர்ந்து சில நாட்கள் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடந்தன. ஆனால் பின்னர் அரசியல் குறுக்கீடு காரணமாக இந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதை நிறைவேற்ற காஞ்சிபுரம் கலெக்டர் கஜெலட்சுமி தீவிரம் காட்டினாலும் கூட நேர்மையான அவரே கூட அரசியல் குறுக்கீடு காரணமாக பின்வாங்க நேரிட்டது.

மீண்டும் வெள்ளம் வந்தால்

மீண்டும் வெள்ளம் வந்தால்

இந்த நிலையில் மீண்டும் ஒரு பெரு வெள்ளம், மழை வந்தால் சென்னை தாங்குமா, அதற்கேற்ப நாம் தயார் நிலையில் உள்ளோமே என்பது குறித்து ஒரு குழு விவாதம் சென்னையில் நடந்தது.

கேளு சென்னை கேளு

கேளு சென்னை கேளு

அறப்போர் இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் கேளு சென்னை கேளு என்ற பெயரில் வள்ளுவர் கோட்டத்தில் ஒரு விவாத நிகழ்ச்சி நடந்தது. அதில் சென்னை நகர பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து இதில் ஆர்வமாக கலந்து கொண்டனர்.

வெள்ள பாதிப்பு

வெள்ள பாதிப்பு

பெரும்பாலானவர்கள் வெள்ள பாதிப்பு குறித்துத்தான் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். பல சந்தேகங்களையும் வெளியிட்டனர். இதில் கலந்து கொண்டு பேசியவர்களின் பெரும்பாலான பொதுவான கருத்து மீண்டும் ஒரு பெரும் மழை வந்தால் சென்னை தாங்காது. அதற்கேற்பத்தான் நமது ஆயத்த நிலை உள்ளது என்பதே.

பொறுப்பில்லாத அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள்

பொறுப்பில்லாத அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள்

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு முதல்வர் ஜெயலலிதா, பொதுப்பணித்துறை அமைச்சர், பிற துறை அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என பல தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒருவரும் வரவில்லை. மக்களை சந்திக்க "ஓசி"யில் கிடைத்த வாய்ப்பு இது. இதைக் கூட பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை இந்த அரசியல்வாதிகளால். திமுகவின் சேப்பாக்கம் எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் மட்டுமே வந்திருந்தார்.

அரசியல் சார்பற்ற கூட்டம்

அரசியல் சார்பற்ற கூட்டம்

இந்தக் கூட்டம் அரசியல் சார்பற்றதாக அமைந்திருந்தது. பலரும் தத்தமது கவலைகளை வெளிப்படுத்தினர். வெள்ள பாதிப்பு குறித்துத்தான் பலரும் பேசினர். ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் உள்ளது குறித்து பலரும் புலம்பினர், குமுறினர்.

இன்னும் சுதாரிக்காத அரசு, அதிகாரிகள்

இன்னும் சுதாரிக்காத அரசு, அதிகாரிகள்

பெருங்குடியைச் சேர்ந்த சுபத்ரா என்பவர் கூறுகையில், எனது பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும். சாதாரண மழை பெய்தாலே தண்ணீர் தேங்கும். கடந்த வருடம் மிகப் பெரிய கஷ்டத்தை அனுபவித்து விட்டோம். இன்னும் கூட அங்கு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கவில்லை. மழை நீர் கால்வாய்களை சரி செய்யவில்லை. கால்வாய்கள் பலவும் அடைத்துக் கிடக்கிறது, ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எதையும் சரி செய்ய யாரும் வரவில்லை. மீண்டும் மழை வந்தால் நாங்கள் தாங்க மாட்டோம் என்றார் கவலையுடன்.

ரூ. 110 கோடி என்னாச்சு?

ரூ. 110 கோடி என்னாச்சு?

சென்னை நகரில் உள்ள ஏரிகளையும், கால்வாய்களையும் சுத்தம் செய்து தயார் நிலையில் வைக்க ரூ. 110 கோடி ஒதுக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி முன்பு அறிவித்திருந்தது. அந்தப் பணிகள் முடிந்ததா, நடைபெற்றதா என்பது தெரியவில்லை. இன்னும் 2 மாதமே உள்ள நிலையில் வரப் போகும் வட கிழக்குப் பருவ மழைக் காலத்தை சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பது புரியவில்லை.

படங்கள்: டேவிட் மனோகர், அறப்போர் இயக்கம்.

English summary
Is Chennai really ready to face the NE monsoon ?, this was the topic which was debated in a meeting held by Arappor Iyakkam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X