For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தல்... தமிழகத்தில் புதிய கூட்டணிக்கு தயாராகும் காங்கிரஸ்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் புதிய கூட்டணிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி ரகசிய முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சட்ட மன்ற தேர்தலின் போது, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியும், திமுகவும் இணைந்து களத்தில் குதித்தன. ஆனால் 2 ஜி மற்றும் இலங்கை தமிழர் படுகொலை விவகாரம் போன்ற பல்வேறு விவகாரங்களால், படு தோல்வி அடைந்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் இடையே பல்வேறு காரணங்களால் கூட்டணி உடையும் நிலைக்கு சென்றது. ஆனால், திமுக தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி எம்.பி. பதவிக்கு திமுக, காங்கிரஸ் கட்சியின் தயவை நாடியது. காங்கிரஸ் கட்சியும் திமுகவை ஆதரித்தது.

இந்த நிலையில், விரைவில் லோக்சபா தேர்தல் வர உள்ளது. அப்போது திமுகவும், காங்கிரஸ் கட்சியும் வழக்கம் போல் கூட்டணியில் தொடருமா அல்லது புதிய பாதை அமைக்குமா என பல்வேறு யுகங்கள் அரசியல் வட்டாரத்தில் நிலவுகின்றது.

இந்த நிலையில், தமிழகத்தில், காங்கிரஸ் கட்சி புதிய கூட்டணிக்கு அடித்தளம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், புதிய கூட்டாளி காங்கிரஸ் கட்சி சுமார் 8 முதல் 10 சீட்கள் வரை மட்டுமே தர முடியும் என அடம் பிடிப்பதாக கூறப்படுகின்றது.

மேலும், இரு தரப்பையும் சுமுகமாக கொண்டு செல்ல அரசியலில் மிகவும் பழுத்த பழமான ஒரு அரசியல் பிரமுகர் மிகவும் ஆர்வமாக சில காரியங்களை செய்து வருகின்றார்.

இது குறித்து, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களிடம் விசாரித்தால், ஒரு சிலர் இது உண்மையாக இருக்கலாம் என்றும் மற்ற தலைவர்கள் இதில் துளி கூட உண்மை இல்லை என்றும் கருத்து கூறி வருகின்றனர்.

English summary
Sources in political circles say that Congress is trying to form a new alliance in Tamil nadu for LS election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X