For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆர்கே நகரில் குறைந்த திமுக வாக்கு வங்கி.. கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா?

சென்னை ஆர்கே நகர் தேர்தலில் கடந்த முறையை விட படு மோசமான அளவிலான வாக்குகளை திமுக பெற்றுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தான் திமுகவின் தோல்விக்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும், வழக்கமாக ஆளும் கட்சிக்கு எதிராக விழும் வாக்குகளின் சதவீதம் கூட இந்த முறை திமுகவிற்கு கிடைக்கவில்லையே என்பது தெரிகிறது. திமுக டெபாசிட் கூட வாங்காமல் 3வது இடத்திற்கு இந்த தேர்தலில் தள்ளப்பட்டுள்ளது.

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் அதிமுக, தினகரன் இடையேயான போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பார்க்கப்பட்டது போல, திமுகவிற்கு மக்களின் ஆதரவு எந்த அளவில் இருக்கிறது என்பதை அறிவதற்கான அளவுகோலாகவும் பார்க்கப்பட்டது.

வழக்கமாக இடைத்தேர்தலில் அதிக வாக்குப்பதிவு என்றால் அது எதிர்க்கட்சியான வாக்குகளாகவே பார்க்கப்படும். ஆனால் இந்த முறை ஆர்கே நகரில் பதிவான வாக்குகள் தினகரனுக்கா, திமுகவிற்கா என்பதற்கு விடை கிடைத்துள்ளது.

Is DMK votebank decreased in RK Nagar?

3வது இடத்திற்கு தள்ளப்பட்ட திமுக

பதிவான மொத்த வாக்குகளில் டிடிவி. தினகரனுக்கு 50.32 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு 27.31 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. எதிர்க்கட்சியான திமுக 13.90 சதவீத வாக்குகள் பெற்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

57 ஆயிரம் டூ 24 ஆயிரம்

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஜெயலலிதாவை எதிர்த்து களமிறங்கிய திமுக வேட்பாளர் சிம்லா முத்துசோழன் 57673 வாக்குகளைப் பெற்றார். ஆனால் 2 முறை அடுத்தடுத்து வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மண்ணின் மைந்தன் என்று சொல்லப்பட்ட மருதுகணேஷ் டெபாசிட் கூட பெறவில்லை. நடந்து முடிந்த தேர்தலில் மருதுகணேஷ் 24 ஆயிரத்து 651 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளார்.

சரிகிறதா செல்வாக்கு

அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு தேர்தலாக இது பார்க்கப்பட்ட நிலையிலும் திமுக பலமான வேட்பாளரை நிறுத்தாமல் போனது தான் தோல்விக்குக் காரணமா? இரண்டு முறை வேட்பாளரின் தேர்வு போதும் சிம்லா முத்துச்சோழன் தனக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று திமுக அலுவலகத்தில் காத்திருந்தார். ஆனால் இரண்டு முறையுமே அவருக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது.

திமுக வாக்குவங்கி குறைந்ததா?

ஜெயலலிதா இல்லாத நிலையில் திமுக அதிமுகவை எளிதில் வென்றுவிடும், வெற்றிடத்தை நன்றாக பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆர்கே நகர் தேர்தல் முடிவுகள் திமுகவிற்கு ஷாக்காக அமைந்துள்ளது. மற்றொருபுறம் ஆர்கே நகரில் திமுகவின் வாக்கு வங்கி சதவீதமானது குறைந்துள்ளதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

English summary
Its time for DMK to improve the vote bank in RK Nagar, election result shows that DMK vote bank is decreasing lower as it lost its deposit this time in bye elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X