For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவல்துறையில் இருப்பவர்கள் எல்லாம் காந்தியின் பேரன்களா ? ரஜினி மீது தினகரன் பாய்ச்சல்

காவல்துறையில் இருப்பவர்கள் எல்லாம் காந்தியின் பேரன்களா என்று டி.டி.வி தினகரன் காட்டமாக விமர்சித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினி மீது தினகரன் பாய்ச்சல்-வீடியோ

    சென்னை : தூத்த்துக்குடியில் சமூக விரோதிகள் வன்முறை செய்ததாலே துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் சொல்லும் காவல்துறையினர் எல்லாம், காந்தியின் பேரன்களா என்று ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

    அமமுக துணைப்பொதுச்செயலாளரும், ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினருமான டி.டி.வி தினகரன் சட்டசபை வாயிலிலி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

    Is Government able to prove who is that anti Social elements says TTV

    அப்போது அவர் பேசுகையில், திமுக உறுப்பினர்கள் சட்டசபையைப் புறக்கணிக்காமல், சபைக்கு வர வேண்டும். எதிர்க்கட்சிகள் இல்லாமல் சட்டசபையை நடத்துவது முதல்வருக்கு அழகல்ல.

    ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அரசு வெளியிட்டிருக்கும் அரசாணை பலவீனமானது. உடனடியாக தமிழகத்திற்கு ஸ்டெர்லைட்டோ, தாமிர ஆலைகளோ தேவையில்லை என்று தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

    அப்போதுதான் ஸ்டெர்லைட்டை முழுமையாகச் செயல்படாமல் தடுக்க முடியும். தூத்துக்குடியில் சமூக விரோதிகளின் போராட்டத்தில் புகுந்ததாலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    துப்பாக்கிச்சூட்டில் பலியான தமிழரசன், ஸ்னோலின், மணிராஜ் எல்லாம் எந்த வகையில் சமூக விரோதிகள் என்று அவர்களால் சொல்ல முடியுமா? காவல்துறையினர் எல்லாம் காந்தியின் பேரன்களா ?

    அவர்களைப் பற்றி தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். குட்கா என்றாலே காக்கிச்சட்டை தான் இப்போது ஞாபகம் வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Is Government able to prove who is that anti Social elements says TTV Dhinakaran. RK Nagar MLA TTV Dhinakaran says that, DMK MLAs should come to assembly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X