For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு நாள் கூட கிடைக்காமல் போயிருச்சே!

Google Oneindia Tamil News

Recommended Video

    மெரினாவில் ஒரே ஒருநாள் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

    சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாளை ஒரு நாள் போராட்டம் மெரீனா கடற்கரையில் நடத்திக் கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு நிலையில் அதை இரவில் ஹைகோர்ட் பெஞ்ச் தடை செய்து விட்டது.

    அகில உலகத்தையே தமிழகத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த மண் மெரீனா கடற்கரை மண். பாலகங்காதர திலகர் கால் பதித்த, முழங்கிய மண் மெரீனா மண். சுதந்திரப் போரில் முக்கிய அங்கம் வகித்த மண் மெரீனா மண். இப்படிப்பட்ட மண்ணில் ஒரே ஒரு நாள் மட்டும் போராட்டம் நடத்திக் கொள்ள அனுமதி கிடைத்தது பலரையும் முனுமுனுக்க வைத்தது.

    ஆனால் தற்போது அதற்கும் கூட வழியில்லாமல் செய்து விட்டது சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச்.

    Is one day enough to solve TNs issues?

    தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் மட்டும்தானா பிரச்சினை..?

    • ஜெயலலிதா மறைவு, கருணாநிதி ஓய்வுக்குப் பிறகு தமிழகத்தை திட்டமிட்டு சூறையாடி வருகின்றனர்.
    • ஆள் ஆளுக்கு கட்சி ஆரம்பிக்கிறார்கள். தலைவர்கள் எல்லாம் ஆபாசமாக பேச ஆரம்பித்து விட்டனர். வன்முறைப் பேச்சுக்களுக்கு வரம்பே இல்லை. மக்கள் பயந்து போய் கிடக்கின்றனர்.
    • டாஸ்மாக் துயரத்திலிருந்து தமிழகம் மீட்டெடுக்கப்பட வேண்டியுள்ளது. தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் தமிழகத்துப் பெண்கள்.
    • தமிழகத்தில் எந்தவிதமான நியாயமான கோரிக்கைகளும் நியாயமான முறையில் நிறைவேறுவதில்லை. அடக்குமுறைகளுக்கு இங்கு பஞ்சமே இல்லை.
    • கல்வி நிலையங்கள் ஊழல், பாலியல் முறைகேடுகளில் சிக்கித் தவிக்கின்றன. தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணக் கொள்ளை தலைவிரித்தாடுகிறது.
    • தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள் வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளன. சிறுமிகள் சிதைக்கப்படுகிறார்கள். பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.
    • ஆணவக் கொலைகள் இன்னும் கூட நின்ற பாடில்லை. தொடர் கதையாக தொடர்ந்து கொண்டுள்ளன.
    • தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக அழிக்கப்பட்டு வருகிறது. நிம்மதியாக மீன் பிடித்து விட்டு திரும்ப முடியவில்லை.
    • காவிரி டெல்டா பாலைவனமாகி வருகிறது. மீத்தேன், ஹைட்ரோகார்பன் என்று பற்பல பெயர்களில் நாலாபுறமும் சுற்றி வளைத்து வேட்டையாடி வருகின்றனர். விடிவே இல்லை.
    • தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
    • நெல்லையில் தாமிரபரணியை சுருக்கி சீரழித்து வருகின்றனர்.
    • விவசாயிகளின் பிரச்சினைகள் கணக்கே இல்லாமல் நீண்டு கொண்டிருக்கின்றன. வங்கிகளின் கடன் வசூல் அடாவடியாக போய்க் கொண்டுள்ளது. ரவுடிகளை வைத்து கடன் வசூலிப்பதால் எத்தனை எத்தனை தற்கொலைகள்.
    • தாது மணல் கொள்ளைக்கு வரம்பே இல்லை. இயற்கை வளச் செல்வங்கள் கொள்ளை போவதை தடுக்கவும் உறுதியான நடவடிக்கை இதுவரை இல்லை.
    • மக்கள் தங்களது கோரிக்கைக்காக நடுத் தெருவுக்கு வருவது அதிகரித்து வருகிறது. தினசரி ஒரு போராட்டம், உண்ணாவிரதம், தடியடி என்று தமிழகமே தகித்துக் கொண்டிருக்கிறது.
    • நீட் பிரச்சினை ஓயவில்லை. அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் என அனைத்துத் தரப்பிலும் ஏகப்பட்ட அதிருப்திகள்.
    • உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடக்கும் என்றே தெரியவில்லை. மேயர் இல்லை, நகராட்சிகளுக்குத் தலைவர் இல்லை, கவுன்சிலர் இல்லை. கிராமப்புறங்கள் ஸ்தம்பித்துப் போயுள்ளன.
    • அடி மட்டத்திலிருந்து கோட்டை வரை ஊழல் கொடி கட்டிப் பறக்கிறது. இடமாற்றம், நியமனம் என எல்லாவற்றுக்கும் கமிஷன். லட்சக்கணக்கில் பணம் இடம்மாறும் அவலம்.

    இன்னும் இன்னும் எத்தனை எத்தனை பிரச்சினைகள்.. இத்தனையையும் தீர்க்க.. ஒரு நாள் போதுமா?

    English summary
    Tamil Nadu is struggling with no of issues which are embroiling the state for the last two years. Is one day protest enough to solve TN's issues?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X