For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

8 கோடி பேர் உள்ள ஒரு மாநிலத்திற்கு நீட் தேர்வு மையம் பெறும் தகுதி கிடையாதா? காங். ஜோதிமணி ஆவேசம்

தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படாததற்கு காங்கிரஸ் நிர்வாகி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு வெளிமாநிலம் செல்லத்தான் வேண்டும்- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படாததற்கு காங்கிரஸ் நிர்வாகி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகத்தில் போதுமான அளவு நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை.

    Is Tamil Nadu not deserve to have neet exam center: Jothimani

    நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் போதுமான அளவு அமைக்கப்படாததற்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகியான ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார்.

    அதில் மோடி அரசு தமிழர்களின் பொறுமையை எல்லை தாண்டி சோதித்து வருகிறது. 8 கோடி மக்கள் வசிக்கும் ஒரு மாநிலத்திற்கு நீட் தேர்வு மையம் கூட பெறும் தகுதி கிடையாதா? எதற்கு அடுத்த மாநிலத்திற்குச் செல்லவேண்டும்? உச்சநீதிமன்றமும் இந்த துரோகத்தை ஆதரிப்பது எவ்விதத்தில் நியாயம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    English summary
    Tamil Nadu Congress executive Jothimani condemns for not keeping NEET exam centers in Tamil Nadu. She raised a question that, Is Tamil Nadu not deserve to have neet exam center.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X