For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிபிஎஸ்இ சர்வாதிகார அமைப்பா? வவ்வாலுக்கு வாவால் என்று கேள்வி கேட்பீர்களா? ஹைகோர்ட் சரமாரி கேள்வி

By Veera Kumar
Google Oneindia Tamil News

மதுரை: நீட் விவகாரத்தில் சிபிஎஸ்இக்கு மதுரை ஹைகோர்ட் கிளை சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி ராஜ்யசபா உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், ஹைகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ''நீட் தேர்வை தமிழ் வழியில் எழுதியபோது, அதில் 49 வினா-விடைகள் தவறாக இருந்தன. இதனால் 196 மதிப்பெண் குறைவாக கிடைப்பதால், தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு மருத்துவ சீட் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி தவறான 49 வினா-விடைகளுக்குரிய 196 மதிப்பெண்களை வழங்கவும், நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது எனவும் உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

டிக்ஷனரி எது

டிக்ஷனரி எது

இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டுவந்தது. சிபிஎஸ்இ தரப்பில், அறிவியல் பாடத்திலுள்ள ஆங்கில வார்த்தைகளை மொழி மாற்றம் செய்தபோது சரியான தமிழ் வார்த்தையை கண்டறிந்து அவற்றை பயன்படுத்த என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டது, என்ன டிக்ஷனரி பயன்படுத்தப்பட்டது என்பது பற்றி சிபிஎஸ்இ விளக்கம் தர உத்தரவிட்டனர்.

கண்டுக்காதீங்க

கண்டுக்காதீங்க

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்கு தொடராத நிலையில், இந்த வழக்கை பெரிதாக எடுக்க வேண்டாம் என்றார்.

சர்வாதிகாரியா

சர்வாதிகாரியா

அப்போது நீதிபதிகள் கோபமடைந்தனர். நீங்கள் தவறு செய்தாலும், அதை எதிர்த்து யாரும் வழக்கு தொடர கூடாது என்கிறீர்களா? நீட் விஷயத்தில் சிபிஎஸ்இ அமைப்பு சர்வாதிகாரி போல செயல்படுகிறதா? என்றனர்.

வவ்வாலுக்கு வாவால்

வவ்வாலுக்கு வாவால்

மேலும், பீகாரில் தேர்வு எழுதியவர்களைவிட தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறதே எப்படி? என்று சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இதய நாளங்கள் என்பதற்கு பதிலாக இருதய நலங்கள் என்றும், வவ்வால் என்பதற்கு பதில், வாவால் என்றும், கடை நிலை, இடை நிலை போன்ற வார்த்தைகள் மாற்றி, மாற்றியும் கேட்கப்பட்டுள்ளதே, இதை எப்படி மாணவர்கள் புரிந்து கொள்வார்கள். இதற்காக கருணை மதிப்பெண் தர முடியாதா என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். மேலும், வழக்கு விசாரணை முடிவடைந்ததாக கூறிய நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளனர்.

English summary
Is the CBSE acting as a dictator in the Neet issue. How is the rate of passing higher than the students attent in examination at Bihar asks High court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X