For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா, இல்லையான்னு தெரியணுமா?: 1950க்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்க

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் உள்ளதா இல்லையா என்பதை மக்கள் 1950 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி தெரிந்து கொள்ள முடியும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் உள்ளதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வாக்காளர்கள் 1950 என்ற எண்ணிற்கு வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். எஸ்.எம்.எஸ். அனுப்பினால் அந்த செல்போன் எண்ணிற்கு தேர்தல் ஆணையம் பதில் அனுப்பும்.

Is your name in Voters list?: Wanna check?

அந்த பதிலில் வாக்காளரின் பெயர், முகவரி, வாக்குப்பதிவு மையம் உள்ளிட்டவையின் விபரம் இருக்கும்.

தேர்தல் நாள் அன்று தங்களின் வாக்குச்சாவடியில் எவ்வளவு கூட்டம் இருக்கிறது என்பதையும் 1950 என்ற எண்ணுக்கு கியூ என்று டைப் செய்து எஸ்.எம்.எஸ். அனுப்பி தெரிந்து கொள்ள முடியும். கியூ என்று டைப் செய்து அனுப்பினால் வாக்குச்சாவடியில் எத்தனை பேர் வரிசையில் நிற்கிறார்கள் என்ற விபரம் உடனடியாக எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றார்.

English summary
TN CEO Rajesh Lakhoni announced that people can check their names in voters list by sending sms to 1950 with their voter ID number.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X