For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முருகன் கோவிலில் வெள்ள நீரை அகற்றி பக்தர்கள் வழிபட உதவிய எஸ்டிபிஐ கட்சியினர்

Google Oneindia Tamil News

கடலூர்: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் முருகன் கோவிலில் தேங்கிய வெள்ள நீரை அகற்றி அங்கு வழிபாடு நடத்த வசதி செய்து கொடுத்துள்ளனர் எஸ்டிபிஐ கட்சித் தொண்டர்கள்.

Islamic party cadres help to drain flood water from a Murugan temple

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,கடலூர், ஆகிய மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை மற்றும் வெள்ளத்தால் அதிகமான இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது தற்பொழுது மழை விட்டாலும் மழை தண்ணீர் அதிகமான இடங்களில் தேங்கி உள்ளதால், மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Islamic party cadres help to drain flood water from a Murugan temple

இதை கருத்தில் கொண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சுத்தப்படுத்த தனி குழு ஒன்று அமைத்து செயல்பட்டு வருகிறது, அதனுடைய ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை பகுதி குமரவேல் தெருவில் உள்ள முத்துக்குமார சுவாமி கோயிலை சுற்றி கடந்த ஏழு நாட்களாக மழை தண்ணீர் தேங்கி நின்றது.

Islamic party cadres help to drain flood water from a Murugan temple

அந்த பகுதி மக்களும், இந்து சமய நல துறை நிர்வாகிகளும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ள மீட்பு குழுவை தொடர்பு கொண்டு இந்த பகுதியில் உள்ள குமரவேல் கோயிலில் தண்ணீர் தேங்கி நிற்கிறது, எங்களால் இந்த கோயிலில் வழிபாடு செய்ய முடியவில்லை, இன்னும் மூன்று நாட்களில் இந்த கோயிலில் விளக்கு பூஜை வழிபாடு நடைபெற உள்ளதால் கோயிலில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

உடனடியாக அந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி போர்க்கால அடிப்படையில் இரண்டு குழுவாக பிரிந்து, ஒரு குழு தேங்கி நிற்கும் தண்ணீரை நீர் இறைக்கும் மோட்டார் பயண்படுத்தி வெளியேற்றும் பணியையும் மற்றொரு குழு தண்ணீர் போக முடியாமல் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கால்வாய்களை வெட்டி தண்ணீர் வெளியேற்றும் பணியையும் செய்தனர். தண்ணீரின் அளவு அதிகமாக இருந்த காரணத்தால், இன்றும் அந்த தண்ணீரை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Islamic party cadres help to drain flood water from a Murugan temple

அதோடு கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியிடம் தொடரும் மக்களின் கோரிக்கையான பெண்கள் உயர் நிலைப்பள்ளி, ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, கிளை சிறைச்சாலை, தபால் நிலையம் ரயில்வே காலனி, ஆகிய பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றும் பணியும் தொடர்ந்து நடைபெறும் என மாநில பொதுச் செயலாளர் கூறினார்.

English summary
SDPI, an Islamic party's cadres helped to drain flood water from a Murugan temple in Cuddalore 's Parangipettai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X