For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எ.எஸ்.எல்.வி. டி-6 ராக்கெட்- மோடி வாழ்த்து

Google Oneindia Tamil News

சென்னை: : தொலை தொடர்பு மற்றும் கால நிலை மாற்றம் அறிந்து கொள்வதற்கு உதவும் ‘ஜிசாட்-6' செயற்கை கோளை சுமந்தபடி, ஜி.எஸ்.எல்.வி-டி6 ராக்கெட், இன்று மாலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தகவல் தொடர்பு மற்றும் காலநிலையை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காகவும், ‘எஸ்.பேண்ட்' தொலைத்தொடர்புக்கு பயன்படும் வகையிலும் ‘ஜி சாட்-6' என்ற செயற்கை கோளை வடிவமைத்துள்ளது.

ISRO launches GSLV-D6 successfully

இந்த செயற்கை கோளை சுமந்தபடி ‘ஜி.எஸ்.எல்.வி- டி6' ராக்கெட் இன்று மாலை, சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் சீறிப் பாய்ந்தது.

இந்த ராக்கெட் இந்தியாவின் 9-வது ‘ஜி.எஸ்.எல்.வி'. ராக்கெட் ஆகும். இது நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட 3-வது ‘கிரையோஜெனிக்' என்ஜின் பொருத்தப்பட்டதாகும். இதேபோன்று ஜிசாட்-6 செயற்கை கோள், இந்த வரிசையிலான 12-வது செயற்கை கோள் ஆகும்.

ISRO launches GSLV-D6 successfully

இந்த செயற்கைகோளின் ஆயுள்காலம் 9 ஆண்டுகள் ஆகும். இது தகவல் தொடர்பில் சிறப்பான பங்கு பணி ஆற்றும் என விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

ஜி.எ.எஸ்.எல்.வி. டி-6 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு பிரதமர் மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘மற்றுமொரு சாதனையை நமது விஞ்ஞானிகள் படைத்துள்ளனர். ஜிசாட் -6 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியதற்காக இஸ்ரோவிற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என அதில் மோடி தெரிவித்துள்ளார்.

English summary
Isro’s Geostationary Satellite Launch Vehicle (GSLV-D6) successfully launched from Sriharikota spaceport on Thursday carrying communication satellite GSAT-6.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X