For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே அறிய 3 செயற்கைக் கோள்கள்... மே 9ல் ஏவுகிறது இஸ்ரோ!

Google Oneindia Tamil News

சென்னை: சுனாமி, நிலநடுக்கம் போன்ற பேரிடர்களை அறிய 3 செயற்கைகோள்கள் 9 ஆம் தேதி ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ தலைவர் கிரண்குமார் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது அவர், "உலகில் ஏற்படும் சுனாமி, பூகம்பம் போன்ற பேரழிவு பேரிடர்களை முன்னதாக அறிந்து மக்களை பாதுகாக்க வசதியாக 3 செயற்கைகோள்களை இஸ்ரோ தயாரித்து வருகிறது.

ISRO to Place Three Satellites

அதற்கான பணிகள் நிறைவடைந்து ஜூன் 9 ஆம் தேதி விண்ணில் செலுத்த இருக்கிறோம். தரை வழி, கடல் வழி, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றிற்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.சை சேர்ந்த 7 செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது.

இதில் 4 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு விட்டன. 5 ஆவது செயற்கைகோள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 6 மற்றும் 7 ஆவது செயற்கைகோள்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் விண்ணில் அனுப்பப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
After the successful IRNSS-1D mission in March, the Indian Space Research Organisation (ISRO) is gearing up to place three satellites .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X