For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிருஷ்டி ஃபிரைடுகிராமில் வருமானவரி சோதனை.. 4வது நாளாக அதிகாரிகள் ஆய்வு!

கிருஷ்டி ஃபிரைடுகிராம் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று நான்காவது நாளாக சோதனை செய்து வருகிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: கிருஷ்டி ஃபிரைடுகிராம் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று நான்காவது நாளாக சோதனை செய்து வருகிறார்கள்.

அரசு பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு சத்துணவு பொருட்கள் அனுப்பி வைக்கும் பணியை செய்து வருகிறது கிருஷ்டி ஃபிரைடுகிராம் நிறுவனம். இந்த நிலையில் இந்த நிறுவனம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு தொடர் புகார் வந்துள்ளது. ஒப்பந்த அடிப்படையில் இந்த நிறுவனம் இந்த பணியை செய்து வருகிறது.

IT department raids in Christy Friedgram Industry for the 4th day

தொடர் புகார் வந்ததால் வரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர்.சென்னை, கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்செங்கோடு, பெங்களூரில் வருமான வரி சோதனை செய்தனர்.கிருஷ்டி ஃபிரைடுகிராம் நிறுவனத்திற்கு சொந்த இடங்களில் எல்லாம் சோதனை நடந்தப்பட்டது.

முதல் நாள் மொத்தம் 76 இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது. அதேபோல் 500க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

ஆனால் சோதனை முடியாமல் கடந்த மூன்று நாட்களாக செய்யப்பட்டுள்ளது. திருச்செங்கோட்டில் மட்டும் 10 இடங்களில் சோதனை நடந்தது. முதல் நாள் முடிவில் வரித்துறை சோதனையை தொடர்ந்து நிறுவனத்தின் தலைவர் குமாரசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் 4 ஆம் நாளாக வருமானவரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு சத்துணவு பொருட்கள் அனுப்பியதில் அவர் முறைகேடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. திருச்செங்கோடு ஆண்டிப்பாளைய தலைமை அலுவலகத்தில் தற்போது சோதனை நடக்கிறது.

English summary
The IT department raids in all branches of Christy Friedgram Industry for the 4th day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X