For Daily Alerts
Just In
சென்னையில் அதிர்ச்சி.. 9வது மாடியில் இருந்து குதித்து ஐடி நிறுவன பெண் ஊழியர் தற்கொலை

தற்கொலை செய்த பெண் ஐடி ஊழியர் | மனநலம் குன்றிய சிறுவனை கடத்த முயற்சி- வீடியோ
சென்னை: துரைப்பாக்கத்தில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த இளம்பெண் 9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை துரைப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் பிரியங்கா என்ற இளம்பெண் ஒருவர் பணியாற்றி வந்தார்.

இன்று வழக்கம்போல் பணிபுரிந்த அவர் இன்று மாலை திடீரென 9 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சக ஊழியர்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த இளம் பெண் 9வது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.