For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குதித்த ஐடி ஊழியர்கள்... போராட்ட களமாக மாறிய தமிழகம்!!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னையில் ஐடி ஊழியர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அனைத்து தரப்பினரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதராவான போராட்டத்தில் குதித்துள்ளதால் தமிழகம் முழுவதும் போராட்டம் உச்சகட்டத்தை எட்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை தரமணி சாலையில் உள்ள ஐடி ஊழியர்கள ஜல்லிக்கட்டுக்கு ஆதராவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து தரப்பினரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளதால் தமிழகம் முழுவதும் போராட்டக்களமாக மாறியுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்நிலையில் இன்று இந்த தடையை நீக்கி ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

 IT employees also protest for jallikattu in Chennai

ஆனால் பொங்கலுக்கு முன்பு தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது. இதனால் ஏமாற்றமடைந்த தமிழர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

சென்னையில் 500க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் தரமணி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர்.

சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஐடி ஊழியர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இறங்கியிருப்பதன் மூலம் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

English summary
IT employees also protest for jallikattu in Chennai. They did road blocked to demand jallikattu. over 500 employees participated in this road blacked protest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X