For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கோவையில் 5 கிமீ தூரத்துக்கு ஊர்வலம் நடத்திய ஐடி ஊழியர்கள்!!

ஜல்லிக்கட்டுக்கு நடத்த வலியுறுத்தி கோவையில் ஐடி நிறுவன ஊழியர்கள் 5 கிமீ தூரத்துக்கு ஊர்வலம் நடத்தினர். அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனர்.

Google Oneindia Tamil News

கோவை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி கோவையில் உள்ள டைடல் பார்க்கில் பணிபுரியம் பல்வேறு நிறுவன ஊழியர்கள் ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலத்தில் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கோவை ஹோப் காலேஷ் பகுதியில் உள்ள கோயமுத்தூர் டைடல் பார்க்கில் பணியாற்றும் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த ஐடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

IT employees rally for supporting Jallikattu in Coimbatore

ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர். அவர்கள் பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும், ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.

டைடல் பார்க்கில் துவங்கிய ஊர்வலம் அவிநாசி சாலை வழியாக மீண்டும் டைடல் பார்க் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. தமிழகர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பாதுகாக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

English summary
Kovai IT employees did rally for supporting Jallikattu. over thousands employees partcipated in this rally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X