For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விவேக், பிரியா மட்டும்தான் மீடியாவுல பேசுவாங்களா... ஃபேஸ்புக்கில் திவாகரன் மகன் ஜெயானந்த் 'பொங்கல்’

விவேக், பிரியாவுக்கு போட்டியாக திவாகரன் மகன் ஜெயானந்தும் ஃபேஸ்புக்கில் பொங்கியுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தியாளர்களை மழையிலேயே நிற்க வைத்து பேட்டி கொடுத்த விவேக்!- வீடியோ

    சென்னை: வருமான வரி சோதனையில் சிக்கிய விவேக், கிருஷ்ணபிரியா மீடியாக்களில் பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் திவாகரன் மகன் ஜெயானந்த் ஃபேஸ்புக்கில் பொங்கியிருக்கிறார்.

    சசிகலா குடும்பத்தில் அடுத்த தலைமுறையினரிடையே யார் தலையெடுப்பது என்பதில் பெரும் யுத்தமே நடந்து வருகிறது. சசிகலாவின் அண்ணன் மகன் விவேக், மகள் கிருஷ்ணப்பிரியா, சசிகலாவின் தம்பி திவாகரன் மகன் ஜெயானந்த் ஆகியோரிடம்தான் இந்த போட்டி இருக்கிறது.

    தினகரனுடன் விவேக் கூட்டணி

    தினகரனுடன் விவேக் கூட்டணி

    சசிகலா அதிமுகவை கைப்பற்றிய நிலையில் ஜெயானந்துக்கு அதிமுகவில் பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. அதேநேரத்தில் தினகரனுடன் இணைந்து விவேக் செயல்பட்டு வந்தார்.

    பொது கூட்டத்தில் ஜெயானந்த்

    பொது கூட்டத்தில் ஜெயானந்த்

    இதனால் விவேக்கும் ஜெயானந்தும் சமூகவலைதளங்களில் பகிரங்கமாக மோதிய சம்பவங்களும் நடந்தன. ஒருகட்டத்தில் தினகரன், திவாகரன் கை கோர்த்தனர். இதையடுத்து மேலூர் பொதுக்கூட்டத்தில் ஜெயானந்த் மேடையேற்றப்பட்டார்.

    ஐடி ரெய்டில் சசிகலா குடும்பம்

    ஐடி ரெய்டில் சசிகலா குடும்பம்

    மேலூர், திருச்சி பொதுக்கூட்டங்களுக்கு காரணமே டெல்டா மாவட்டங்கள்தான் என ஜெயானந்த் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக சசிகலா குடும்பமே வருமான வரி சோதனையில் சிக்கியது. முக்கியமாக விவேக், கிருஷ்ணப்பிரியாதான் பிரதான இலக்கு வைக்கப்பட்டனர்.

    ஃபேஸ்புக்கில் ஜெயானந்த்

    ஃபேஸ்புக்கில் ஜெயானந்த்

    ஆனாலும் அசராத விவேக்கும் பிரியாவும் வருமான வரி சோதனையில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை; அதிகாரிகள் தங்களது கடமையைச் செய்தனர் எனக் கூறி மீடியாக்களில் இடம்பிடித்தனர். விட்டுவிடுவாரா ஜெயானந்த்? உடனே தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், 70 மணிநேர வருமான வரி அதிகாரிகளின் விசாரணை மிகவும் நன்றாக இருந்தது; அரசியலுக்கு வருவதற்கு இது அவசியமானது என பதிவிட்டிருந்தார். ஜெயானந்த் ஆதரவாளர்கள் உடனே ஃபேஸ்புக்கில் பொங்கி கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    English summary
    Jeyanandh Divakaran said that "70 hours of interrogation with the income tax department was a good experience that is quite essential for politics" in his facebook page.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X