For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் 3 பேர் பலி- கமல்ஹாசன் ஆழ்ந்த இரங்கல்

சென்னை அருகே ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் - 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பில் நேற்று இரவு கிரேன் அறுந்து கீழே விழுந்தது. இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட

Google Oneindia Tamil News

Recommended Video

    Indian 2 Shooting spot | படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பலி

    சென்னை: இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து கீழே விழுந்த விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் குறித்து நடிகர் கமல்ஹாசன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

    சென்னை அருகே ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் - 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பில் நேற்று இரவு கிரேன் அறுந்து கீழே விழுந்தது.

    Kamal Indian2

    இதில் உணவு விநியோகம் செய்து வந்த மது (வயது 29), சந்திரன் (வயது 60) மற்றும் கிருஷ்ணா ஆகியோர் உயிரிழந்தனர். திரைத்துறையினரை இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சமூக வலைதளங்களில் நள்ளிரவு முதலே திரை உலகத்தினர் இச்சம்பவம் குறித்த அதிர்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

    எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன். முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது. இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்.

    இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

    English summary
    Actor Kamal Haasan tweet on Indian-2 Accident that the pain of the family members who lost them will be multiple times than that of his.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X